December 8, 2021

ராஜபாளையம் தொகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட கட்டிடங்களை தங்கப்பாண்டியன் எம் எல் ஏ திறந்து வைத்தார்…

1 min read
Spread the love

இராஜபாளையம் தொகுதியில் இன்று (20.11.2021) சேத்தூர் சேவுகப் பாண்டியன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து (2019-2020) ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சுகாதார வளாகம் மற்றும் பேவர்பிளாக் தளம் அமைக்கப்பட்டது. இதனை பள்ளி மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும் பள்ளியின் சார்பாக மாணவ மாணவிகள் அமரவும் எழுதவும் 100 இருக்கைகள் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதற்கு எம் எல் ஏ அவர்கள், கண்டிபாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக் கூறினார். அதனைத்தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற பொதுமருத்துவ முகாமை பார்வையிட்டு மாணவ மாணவிகளின் கருத்துகளை கேட்டறிந்தார்.

மேலும் ஆசிரியப்பெருமக்கள் , பள்ளிக்கு காலை மாலை மாணவிகள் வருகைபுரியும் போது போக்குவரத்து இடையூறாக உள்ளதால் போக்குவரத்தை சரிசெய்ய எம் எல் ஏ அவர்களிடம் கோரிக்கை வைத்தனர் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு நேரில் சென்று போக்குவரத்தை சரிசெய்யுமாறு காவல் ஆய்வாளரிடம் கேட்டுக்கொண்டார் அவர்களும் காவலர்களைக்கொண்டு போக்குவரத்தை சரிசெய்வதாக உறுதியளித்தனர். இந்நிகழ்வில் டி.இ.ஓ முத்தையா பள்ளி தலைமையாசியர் சிவகுமாரி திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் பள்ளி ஆசிரியப்பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed