December 8, 2021

விருதுநகர் அருகே உள்ள, சாஸ்தா கோவில் அணையை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களும் எம்.எல்.ஏ எஸ்.தங்கப்பாண்டியன் அவர்களும் திறந்து வைத்தனர்…

1 min read
Spread the love

தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். இராமச்சந்திரன் அவர்கள் மற்றும் தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ஆலோசனையின்படி இராஜபாளையம் தொகுதி தேவதானம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சாஸ்தா கோவில் அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில் இன்று (21.11.2021) மாலை 5.30 மணியளவில் சாஸ்தா கோவில் அணையை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களும் எம்.எல்.ஏ எஸ்.தங்கப்பாண்டியன் அவர்களும் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி மற்றும் அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed