November 27, 2021

பரமக்குடியில் நடந்த நூலக நிகழ்ச்சியில், “இளைஞர்களின் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும் ” எம்.பி. நவாஸ் கனி வேண்டுகோள்….

1 min read
Spread the love

இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்த பொதுநல அமைப்புக்கள் முன் வர வேண்டும் என ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். எம்.
பி. நவாஸ்கனி , பரமக்குடியில் நடந்த நூலக நிகழ்ச்சியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பரமக்குடியில் செயல்பட்டு வரும் மக்கள் நூலகம் என்ற அமைப்பின் செயல்பாடுகளை குறிப்பாக அரசுப் பணி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு மக்கள் நூலகத்தால் நடத்தப்படும் பயிற்சியை பாராட்டி பேசினார். மேலும் மக்கள் நூலக வளர்ச்சிக்காக தனது சொந்த நிதியிலிருந்து ₹25 ஆயிரம் நன்கொடை வழங்கினார்.

புத்தகம் வாசிப்பதில் இன்றைய சமூக இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் நாட்டிற்கும் வீட்டிற்கும் வளமான வருங்காலத்திற்கு அது உத்தரவாதம் அளிக்கும் என்று எம்.பி. நவாஸ் கனி கூறினார் .
முன்னதாக மக்கள் நூலகத்தில் எம்.பி. நவாஸ் கனிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மக்கள் நூலகம் தலைவர் செ.சந்தியாகு தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. செயலாளர் வக்கீல் சி.பசுமலை நூலக செயல்பாடுகளை விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் பொருளாளர் வே.ராசேந்திரன், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட செயலாளர் ந.சேகரன், எழுத்தாளர்கள் நீ.சு.பெருமாள், உரப்புளி நா.ஜெயராமன் ஐக்கிய ஜமாத் தலைவர் ஏ.ஜே.ஆலம் உள்பட பலர் பேசினர்.


கூட்டத்தில் முன்னாள் தலைமை ஆசிரியர் ப.சந்திரபோஸ் செயற்குழு உறுப்பினர்கள் எல்.நடராஜன் வேந்தை சிவா தி.ராஜா மரம் நடும் ஆர்வலர் முருகேசன் பிஎஸ்என்எல் வே.சேதுராஜன் கலைஆசிரியர் எஸ்.ஐயப்பன் தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம் பி. ராமசாமி தமிழாசிரியர் இரா.சக்திவேல் ஆசிரியர்கள் பா.சரவணன் கே செந்தில்குமார் எம்.பி.டி. சி. எஸ்.சடகோபன் வாசகர் வட்டம் ஜி.முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இணைச்செயலாளர் ச.பூபாலன் நன்றி கூறினார்.

செய்தியாளர் – மாமுஜெயக்குமார் / பரமக்குடி.
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed