November 27, 2021

” மதுரை மாநகராட்சி நிர்வாகம் உறங்கி கொண்டு உள்ளதா ” அலட்சிய போக்குடன் இருக்கும் மாநகராட்சி மின் விளக்கு பராமரிப்பு ஊழியர்கள், போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை…

1 min read
Spread the love

மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப் பாதையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விளக்குகள் எதுவும் எரியவில்லை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் மாநகராட்சி வாட்ஸ்அப் புகார் அனுப்பி வைத்திருந்தோம். மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்தும், கடந்த 10 நாட்களுக்கு மேலாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இந்த பகுதியில் உள்ள சாலை ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு செல்லும் பிரதான சாலையாகும்.

மேலும் இப்பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றன சுற்றுலாத்தலமான திருப்பரங்குன்றத்தில் ரயில்வே சுரங்கப் பாதையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தெரு விளக்கு எரியவில்லை என புகார் எழுத்தும் கண்டும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு சமூக விரோதிகளுக்கு உறுதுணையாய் இருக்கும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொலை கொள்ளை நடந்த பிறகு தான் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர். இது சம்பந்தமாக மாநகராட்சி ஆணையாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் தெரு விளக்கு பராமரிப்பு ஊழியர்கள் மீதும் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மக்களுடைய இந்த கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் கூடிய விரைவில் இப்பகுதி மக்கள் போராட்டம் செய்வது என முடிவு செய்துள்ளனர்.

செய்தியாளர் – வி காளமேகம் மதுரை மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed