December 8, 2021

திருவாரூரில், “இல்லம் தேடி கல்வி ” திட்ட விழிப்புணர்வு கலை பிரச்சார வாகனத்தை திருவாரூர் எம்.எம்.ஏ பூண்டி கே.கலைவாணன், முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்…

1 min read
Spread the love

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் “இல்லம் தேடிக் கல்வி ” திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை பிரச்சார வாகனத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், அவர்கள் தெரிவித்ததாவது; மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “இல்லம் தேடிக் கல்வி” எனும் திட்டத்தினை பள்ளிக்கல்வி துறை ஓருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்ய , தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் 10 ஓன்றியங்களிலும் 8 கலைக்குழுவினரை கொண்டு பொதுமக்களிடையே இத்திட்டம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த “விழிப்புணர்வு கலைப்பிரச்சார வாகனம்” தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்விழிப்புணர்வு கலைப்பிரச்சார வாகனத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள 10 ஓன்றியங்களிலும் ஒரு நாளைக்கு இரண்டு பள்ளிகள், இரண்டு குடியிருப்பு பகுதிகள் என்ற வகையில் 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் கலைக்குழு மூலம் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வீதி நாடக கலைஞர்களைக் கொண்டு இத்திட்டத்தின் குறிக்கோளினை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடத்தில் எடுத்து செல்லப்பட உள்ளது. மேலும், இல்லம் தேடிக் கல்வி திட்டமானது கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் 1 முதல் 8 வகுப்புகள் வரை பயிலுகின்ற மாணவர்கள் கற்றல் இழப்பினை ஈடுசெய்தல் மற்றும் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக பள்ளி நேரங்களை தவிர்த்து மாணவர்களின் வசிப்பிடம் அருகே தன்னார்வலர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல்,கற்றல் திறன்களை திட்ட செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல், குறைந்தபட்சம் 6 மாத காலத்திற்கு 1 முதல் 1 1/2 மணி நேரம் எளிய முறையில் செயல்பாடுகள் வாயிலாக கற்றல் வாய்ப்பை வழங்குதல் ஆகும்.

இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பமுள்ளவர்கள் http://illamthedikalvi.tnschools.gov.in/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன், தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம்,மாவட்ட ஊராட்சித்தலைவர் கே.பாலசுப்ரமணியன், முதன்மை கல்வி அலுலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் (மன்னார்குடி) மணிவண்ணன்,(திருவாரூர்) பார்த்தசாரதி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed