January 18, 2022

திருவண்ணாமலை அருகே, கொட்டும் மழையில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது…

1 min read
Spread the love

திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் ஊராட்சியில் இன்று மெகா தடுப்பூசி முகாமையொட்டி நேர் அண்ணாமலை பகுதியில் வசிக்கும் சாமியார்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ், அத்தியந்தல் ஊராட்சி மன்ற தலைவர் இரா. முருகன், ஊராட்சி செயலாளர் ராஜ்குமார், செவிலியர் மேரி ஆஷா, அங்கன்வாடி ஆசிரியர் ரேகா, அங்கன்வாடி சமையல் உதவியாளர் கீதா ஆகியோர் கலந்துகொண்டு கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பல்வேறு இடங்களுக்கு சென்று 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

மாவட்ட அளவில் அத்தியந்தல் ஊராட்சியில் தான் 95 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *