January 18, 2022

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், தலைமையில் நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் , பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை , ஆக்கிரமிப்பு அகற்றுதல் ,கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 198 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் அளித்தனர்.

பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் , திருவாரூர் வட்டம்,கீழக்கூத்தங்குடி வருவாய் கிராமம் ,கூடூர் கிராமத்தினை சேர்ந்த தமிழரசன் என்பவர் கடந்த 19-06-2021 அன்று கூடூர் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் சென்டரில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தை தடுக்க முயற்சித்த போது கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடைய குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் அவர்களின் பொதுநிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை உயிரிழந்தவரின் ( மனைவி) வாரிசுதாரர்க்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், அவர்கள் வழங்கினார் .
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *