January 18, 2022

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன்,
தலைமையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பூண்டி கே.கலைவாணன், முன்னிலையில் நடைபெற்றது….

1 min read
Spread the love

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், அவர்கள் தலைமையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது; திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நவம்பர்-2021 மாத இயல்பான மழையளவு 253.40 மி.மீ ஆகும். 2021 மாதத்தில் 29-11-2021 வரை 679.98 மி.மீ மழைபெய்துள்ளது.

நடப்பாண்டில் சம்பா பருவத்தில் 93,123 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு 93,123 ஹெக்டேரில் சாகுபடியும் , தாளடி பருவத்தில் 54,944 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி செய்த பரப்பில் மழையினால் பாதிப்படைந்த 1,635 ஹெக்டேர் பரப்பு கணக்கிடப்பட்டு மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கிட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 14,8067 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் வடகிழக்கு பருவமழையினால் 16,457 ஹெக்டேர் நெற்பயிர் நெற்பயிர் நீரினால் சூழப்பட்டு பாதிப்படைந்துள்ளது. பாதிப்படைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1,485 மதிப்புடைய குறுகிய கால நெல் இரக விதைகள் 45 கிலோ,ரூ.1235 மதிப்புடைய நுண்ணுட்டம்,25 கிலோ ,ரூ.354 மதிப்புடைய யூரியா 60 கிலோ,ரூ.2964 மதிப்புடைய டி.ஏ.பி.125 கிலோ ஆக மொத்தம் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 மதிப்புடைய நிவாரண இடுபொருட்கள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

வேளாண்மைத்துறை மூலம் இதுவரை சம்பா/தாளடி சாகுபடிக்கு 1196.4 மெ.டன் விதைகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 571 மெ.டன் தேவையான விதை நெல் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர்-2021 உரத்தேவைகளாக யூரியா 13819 மெ.டன்னும் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,தனியார்,கிடங்கு,மொத்த உர விற்பனையாளர் என கையிருப்பாக 2157 மெ.டன்னும் ,டி.ஏ.பி.உரத்தேவையாக 4952 மெ.டன்னும் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,தனியார் கிடங்கு , மொத்த உர விற்பனையாளர் என கையிருப்பாக 753 மெ.டன்னும் , பொட்டாஷ் உரத்தேவையாக 2,452 மெ.டன்னும் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தனியார், கிடங்கு, மொத்த உர விற்பனையாளர் என கையிருப்பாக 544 மெ.டன்னும் , காம்ப்ளக்ஸ் உரத்தேவைகளாக 2275 மெ.டன்னும் , தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன்சங்கம்,தனியார்,கிடங்கு, மொத்தஉர விற்பனையாளர் என கையிருப்பாக 2,759 மெ.டன்னும் உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 2020 -ஆம் ஆண்டு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1,27,881 விவசாயிகளினால் 1,42 ,230 ஹெக்டேர் சம்பா/தாளடி நெற்பயிர் காப்பீடுசெய்யப்பட்டது.

இதில் 1,14,888 விவசாயிகளுக்கு ரூ.297 கோடியே 33 இலட்சம் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீட்டுத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் 8,406 ஹெக்டேர் பரப்பிற்கு 9,316 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதில் கூடுதல் பரப்பிற்கு காப்பீடுசெய்ததால் இழப்பீட்டுத்தொகை மத்திய அரசிற்கு நிதி ஓப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.மேலும் வங்கி கணக்கு எண் மற்றும் IFSC தவறாக உள்ளீடு செய்த விவசாயிகளுக்கு அவர்களது ஆதார் இணைப்பில் உள்ள வங்கிக்கணக்கில் இப்கோ டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 148067 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இதில் 1,64,163 ஹெக்டேர் சம்பா மற்றும் தாளடி நெற்பரப்பு 1,47,014 விவசாயிகளினால் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சாகுபடி பரப்பிற்கு கூடுதலாக பதிவு செய்த விவசாயிகளின் விண்ணப்பங்கள் மற்றும் ஒருமுறைக்கு மேல் பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்களை கண்டறிந்து சரிசெய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து , தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த,பசுமைப் போர்வைக்கான இயக்கம் -2021 திட்டத்தின் சார்பில் 5 விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன்,
அவர்கள் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம்,
தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலைமண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குநர் சிவகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்)திரு.ஹேமா ஹெப்சிபா நிர்மலா,உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *