January 18, 2022

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக, திருச்சியில் ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ₹5.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது…

1 min read
Spread the love

திருச்சி நாவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிவந்த பூமிநாதன் அவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து ஆடுகள் திருடி வந்த திருடர்களால், நவம்பர் 21-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந் நிலையில் அவருடைய குடும்பத்திற்கு
திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில்
உதவி நிதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முதல் காவலர்கள் வரை உள்ள அனைவரும் தங்களால் இயன்ற சிறிய தொகையை இறுதியாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அனைவரின் பங்களிப்பாக ₹5,50,600 பணத்தை பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா ஆணி கிறிஸ்டி அவர்கள் திருச்சியில் உள்ள பூமிநாதன் அவர்களுடைய வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி மற்றும் மகனிடம் வழங்கினார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *