January 18, 2022

அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவரால், கடந்த சில ஆண்டுகளாக அனுப்பம்பட்டு அதிர்ஷ்டபட்டாக மாறி வருகிறது பொதுமக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கியது அனுப்பம்பட்டு ஊராட்சி, மிகவும் பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்க கூடிய இந்த ஊராட்சி மக்கள் 20 வருடங்களுக்கு முன்பு வரை விவசாயமும், அதை சார்ந்த தொழில்களையும் செய்து மிகவும் பசுமையாக வளமாக இருந்த ஒரு ஊராட்சி ஆனால் கடந்த 20 வருடங்களாக இப்பகுதியின் உடைய நிலத்தடிநீர் உவர்ப்பு நீராக மாறியதால், இப்பகுதியில் விளைநிலங்கள் விவசாயிகளுக்கு பயன்படாமல் போயின ஆகையால் அந்த கிராமம் முழுவதும் விவசாயிகளும் விவசாயக் கூலிகளும் மாற்று தொழிலுக்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதன் விளைவாக இந்த ஊராட்சியில் இருக்கக்கூடிய பெரும்பாலான மக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டிட தொழிலாளர் களாகவும் மேலும் ஒரு சிலர் இரண்டு கைகளில் பைகளை ஏந்தி சென்னை மற்றும் சுற்றுவட்டார நகரங்களுக்கு சென்று உணவுப் பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வியாபாரங்களையும் செய்து வருகின்றனர். மீதம் ஊரின் உள்ளே இருக்கக்கூடிய பெண்கள் ஊராட்சி நிர்வாகம் கொடுக்க கூடிய தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த அனுப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள மக்களின் வளர்ச்சி பணிகளுக்காகவும், 36 ஆண்டுகள் திருவிழா நடைபெறாமல் இருந்த அங்காளம்மன் ஆலயத்தின் கொழுப்பு திருவிழாவையும், சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறாமல் இருந்த முத்தாலம்மன் கோயிலுடைய திருவிழாவையும் முன் நின்று தொடர்ந்து நடத்தி அனுப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள அனைத்து சமுதாய மக்களுடைய அன்பையும் ஆதரவையும் பெற்ற சார்லஸ் (எ) உமாமகேஸ்வரன் 2014ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகவும் அதன் பிறகும் அந்த ஊராட்சியின் உடைய வளர்ச்சிக்காகவும், ஊராட்சி மக்கள் வாழ்வாதார பிரச்சினைகளுக்காகவும், தொலைநோக்கு சிந்தனையுடன் பல திட்டங்களை தீட்டி அவைகளை மிக சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். ஆகையால் அதன் பிறகு 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் அவருடைய தாயார் கிருஷ்ணவேணி அம்மாள் ஊராட்சி மன்ற தலைவராக அனுப்பம்பட்டு ஊராட்சி மக்கள் பேராதரவுடன் வெற்றி பெற்றார். அதே போல் சார்லஸ் (எ) உமா மகேஸ்வரன் தொடர்ந்து 2 முறை அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து மக்களுடைய அன்புடனும் ஆதரவுடனும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

சார்லஸ் ஒரு முறை ஊராட்சி மன்ற தலைவராகவும் இரண்டு முறை அனுப்பப்பட்டு கூட்டுறவு சங்க தலைவராகவும் தேர்ந்தெடுத்ததுடன் இரண்டாவது முறையாக அவருடைய குடும்பத்திலேயே அவருடைய தாயார் ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பம்பட்டு ஊராட்சியை மிக சிறப்புடன் நிர்வகித்து வருவது குறித்து அந்த ஊராட்சியை சேர்ந்த மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் பல தகவல்களை கூறினர்.

அதில் குறிப்பாக அனுப்பம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயிலின் திருவிழா குறித்தும் அங்காளம்மன் கோவில் திருவிழா குறித்தும், லட்சுமணன் அவர்கள் கூறுகையில் ; இந்த அனுப்பம்பட்டு முத்தாலம்மன் கோயிலின் உடைய திருவிழாவானது ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு நடைபெறும் வகைகள் ஏற்கனவே கிராமப் பெரியவர்கள் வழிபாடு திட்டங்களை வகுத்து அதன்படி ஒவ்வொரு ஆண்டும் முத்தாலம்மன் கோயிலின் உடைய திருவிழாவை நடத்துவது வழக்கம். இந்நிலையில் 2011 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து சில ஆண்டுகள் இந்த கோயிலின் உடைய திருவிழா தடைபட்டு நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், எனது அன்பு சகோதரர் சார்லஸ் அவர்கள் முன் நின்று முத்தாலம்மன் உடைய கோயில் திருவிழாவை தொடர்ந்து நடத்தினார். அதேபோல் அங்காளம்மன் கோயில் உடைய கொழுப்பு திருவிழாவானது 36 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. அவர் முதல் முறை ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டபோது,
” நான் வெற்றி பெற்றால் முத்தாலம்மன் கோயில் திருவிழாவை நடத்தியது போல் மிகவும் சிறப்பாக அங்காளம்மன் கோயிலின் உடைய திருவிழாவையும் நான் தொடர்ந்து நடத்துவேன்” என மக்களுக்கு உறுதி அளித்ததுடன் அந்த அங்காளம்மன் கோயிலின் வேப்பமரத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மேடையையும் புதியதாக கற்கள் பதித்து புனரமைத்து 2015 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இன்றுவரை மிகவும் சிறப்பாக திருவிழாவை நடத்திவருகிறார்.

மேலும் அனுப்பப்பட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் பெண்களுடைய ஆலோசனையின்படி இந்த இரண்டு கோயில் உடைய திருவிழாவையும் அவர் ஆண்டு தோறும் அமைதியாகவும் எந்தவிதமான சச்சரவுகளுக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பாக திருவிழாவை நடத்தி வருவதன் மூலம், அனைத்து சமுதாய மக்களுடைய மனதிலும் தனியிடம் பிடித்து உயர்ந்து நிற்கிறார் என பெருமையுடன் கூறினார்.

அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அமுல் பாஸ்கர் அவர்கள் கூறுகையில்; இந்த அனுப்பம்பட்டு ஊராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு பொது இடங்கள் இல்லாத சூழ்நிலை நிலவியது இந்நிலையில் சார்லஸ் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற பிறகு இந்த ஊராட்சியில் உள்ள மனைபிரிவுகள் அனைத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை அளவீடு செய்து பல இடங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த பூங்காக்களும் விளையாட்டு மைதானங்களும் மீட்கப்பட்டு தற்போது பல இடங்கள் வேலிகள் அமைத்து ஊராட்சி நிர்வாகத்தின் உடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது.

மீட்கப்பட்ட அந்த பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் ஒரு சிலவற்றில் புது கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏதுவாக அவைகள் பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட வகைப்பாடு மாற்றம் செய்யப்பட்டு அங்கு வருங்காலங்களில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் உறுதியளித்துள்ளார்.

இந்த பணி இதற்கு முன்பு இருந்த எந்த தலைவரும் செய்யாத ஒரு முக்கிய பணியாகும். இந்த பொது பயன்பாட்டு இடங்கள் ஊராட்சி மன்றத்திற்கு நிறைய கிடைப்பதால் எதிர்காலத்தில் அரசினுடைய திட்டங்கள் பல இந்த ஊராட்சிக்கு வருவதற்கு உதவியாக இருக்கும். மேலும் இவர் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற பிறகு மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதுடன் விலையில்லா சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் கிடைக்கிறது.

அதேபோல் ஊராட்சி முழுவதும் இரவு நேரங்களில் கூட பட்ட பகல் போல இருக்கும் அளவிற்கு தெருவிளக்குகள் தொடர்ந்து பராமரிக்கப்படுவது பாராட்டுக்குரியது மக்களுடைய பாதுகாப்பிற்காக ஊராட்சி முழுவதும் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது பாராட்டுக்குரியது எனவும் கூறினார்.

மேலும் அனுப்பம்பட்டு ஊராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திய பிறகு இப்பகுதி பிள்ளைகள் சுகாதாரமாக வகுப்பறையில் படிக்க வேண்டும் என்பதற்காக பெரிய அளவிலான பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து அதை சிறப்புடன் கட்டிமுடித்தும் உள்ளார்.

மேலும் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அனைத்து விதத்திலும் உதவியாக இருந்து அவர்களும் ஓய்வில்லாத உழைப்பை வழங்கி இந்த பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து 100% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெறுவதற்கு பாடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக பொறுப்பு வகிக்க கூடிய சகோதரர் உமாமகேஸ்வரன் அனைத்து விதத்திலும் உதவியாக இருந்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் நான் அனுப்பம்பட்டு பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் பலவிதமான நலத்திட்ட உதவிகளை நான் பெற்றுத் தருவதற்கு அவர் உதவியாக இருந்து வருகிறார். அவருடைய மக்கள் பணியில் மிகவும் சிறப்பானது நமது ஊராட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் முதியோர் உதவித்தொகை பெற்றுத் தந்திருப்பது அவருடைய சிறந்த மக்கள் பணிக்கு உதாரணம் என பெருமிதத்துடன் கூறினார்.

அனுப்பம்பட்டு ஊராட்சிமன்ற கட்டிடத்தை புதியதாக கட்டி முடித்து தற்போது ஊராட்சி மன்ற அலுவலக பணிகள் அந்தக் கட்டிடத்தில் நடந்து வருகிறது. அதுபோல, சின்ன அனுப்பம்பட்டு பகுதி குழந்தைகள் பழைய ஊராட்சி மன்ற கட்டிடம் அருகே இயங்கி வந்த அங்கன்வாடி பள்ளிக்கு சாலையில் நடந்து வர வேண்டியது இருந்ததால், அவர்களுடைய வீட்டிற்கு அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் அனுப்பம்பட்டு பகுதியில் கொரேனா நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டி அனுப்பம்பட்டு பகுதியிலுள்ள நிறுவனத்துடன் அனுப்பம்பட்டு ஊராட்சி நிர்வாகம் இணைந்து வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து மருத்துவ முகாம் நடைபெறும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கட்டிடத்தில் துவக்கப்பட்டு அதில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அதில் படுக்கை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது பாராட்டுக்குரிய ஒரு செயலாகும்.

அனுப்பம்பட்டு பகுதியில் சிறந்த விவசாயியாக திகழ்ந்த குடும்பத்தை சேர்ந்த பாபு அவர்கள் கூறுகையில் ;


எங்களுடைய அனுப்பம்பட்டு ஊராட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் முன்பில் இருந்து நிலத்தடி நீர் தன்மை உவர்ப்பு நீராக மாறி போனதால், விவசாயம் செய்து கொண்டிருந்த நாங்கள் எல்லாம் அந்தத் தொழிலை விட்டுவிட்டு விளைநிலங்களையும் மற்றவர்களுக்கு விற்றுவிட்டு வேறு நிரந்தரமில்லாத தொழில்களுக்கு மாறிவிட்டோம். அதுமட்டுமில்லாமல் அனுப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள மக்களுடைய குடிநீர் தேவைக்கு கூட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வன்னிபக்கம் பகுதியிலுள்ள கொசஸ்தலை ஆற்றில் இருந்து போர் போட்டு அங்கிருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டு அனுப்பம்பட்டில் உள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அங்கிருந்து வரக்கூடிய குடிநீரும் திடீரென உவர்ப்பு நீராக மாறிப்போனதால் அதை மக்கள் குடிக்க பயன்படுத்த முடியாத சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரன் அதே ஆற்றில் புதியதாக மூன்று ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து மேலும் அங்கிருந்து புதியதாக பைப்லைன் மூலம் அனுப்பம்பட்டுக்கு குடிநீரை கொண்டு வந்து சேர்த்தார். மேலும் இப்பகுதியில் இருந்து வரும் மஸ்க் நிறுவனத்தின் உதவியுடன் அனுப்பம்பட்டு, பெரிய அனுப்பம்பட்டு, உதண்டி கண்டிகை போன்ற இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தை நிறுவி அனுப்பம்பட்டு ஊராட்சி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்கி வருகிறார் எனக் கூறினார்.

நிலத்தடி நீரை சேமிக்கும் விதமாக அனுப்பம்பட்டு மடுவிற்கு வரக்கூடிய வரவு கால்வாய்க்கு இடையே சிறிய தடுப்பணை அமைத்து நிலத்தடி நீரை சேமிக்க முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார். ஆண்டியார் பாளையம் பகுதியில் இருந்த குளத்தை சுற்றியிருந்த ஆக்கிரமிப்பை அகற்றி அந்த குளத்தை பராமரிப்பு பணிகள் செய்தார். இவை அனைத்திற்கும் மேலாக ஊராட்சி முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்களையும் பலன் தரும் மரங்களையும் நடவு செய்தார். அதுமட்டும் இல்லாமல் அனுப்பம்பட்டு ஊராட்சி முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் சாலை ஓரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்திருக்கிறார் அவை வருங்காலங்களில் நமது ஊராட்சியில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து வருவாயை கொடுக்கும் என்பது எனது நம்பிக்கை. எனவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் குறிப்பிடக்கூடிய ஒரு விஷயமாக மேய்ச்சலுக்கு செல்லக்கூடிய கால்நடைகள் குடிக்க நீர் கிடைக்காத சூழ்நிலை நிலவியது அதை போக்கும் விதமாக பல இடங்களில் கால்நடைகள் குடிநீர் தொட்டி அமைத்துக் கொடுத்திருக்கிறார் எனவும் கூறினார்.

சுயமாக தொழில் செய்து உழைத்து வருப்பவரும், மக்கள் தொண்டாற்ற என்றும் முதல் ஆளாக ஒடி வந்து நிற்கக்கூடிய இளைஞர் தனமூர்த்தி அவர்கள் கூறுகையில் ;

எங்கள் அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதி இளைஞர்களுக்கும் தொடர்ந்து அறிவுரை வழங்கி அவர்கள் கெட்ட பழக்க வழக்கங்களில் எதிலும் சிக்காமல் இருக்க தொடர்ந்து அறிவுரை வழங்குவதை நான் பார்த்திருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் இளைஞர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்க வேண்டி அவர்கள் அனைவரையும் விளையாட்டில் ஊக்கப்படுத்தி அவர்கள் விளையாடுவதற்கு தேவையான கிரிக்கெட் வாலிபால் போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுத்தும் அவர்கள் விளையாடுவதற்கு தேவையான மைதானங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்து வழங்கியும் உள்ளார்.
மேலும் பல விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியும் ஊக்கப்படுத்துவது அண்ணன் உமாமகேஸ்வரன் அவர்களுடைய பழக்கம்.

அதேபோல் ஊராட்சி முழுவதும் உள்ள அனைத்து பகுதியிலும் உள்ள கோயில் திருவிழாக்களை நடத்துவது போல், ஒவ்வொரு பகுதி மக்களுடைய வேண்டுகோளை ஏற்று பல இடங்களில் வருடம் தோறும் விநாயகர் சிலைகளை நிறுவி மக்கள் வழிபாடு நிகழ்ச்சிகள் நடத்த உதவி வருகிறார். அதேபோல் எங்களுடைய பெரிய அனுப்பம்பட்டு பகுதியில் அம்பேத்கார் மற்றும் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா பிறந்த நாள் , நினைவு நாள் போன்ற தினங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அன்னதானம் வழங்குவது போன்ற மக்களுக்கு உதவும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

அனுப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள இளைஞர்கள் அனைவருடைய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதும் அவருடைய பழக்கம். இதுபோன்ற மக்கள் பணியை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் கூட்டுறவு சங்கத் தலைவருமான அண்ணன் உமாமகேஸ்வரன் அவர்கள் தொடர்ந்து செய்து வருவதால் எங்கள் ஊரில் உள்ள அனைத்து மக்களுடைய அன்பையும் அவர் பெற்றிருக்கிறர்.

உதண்டி கண்டிகை முனிநாதன் அவர்கள் கூறுகையில்;

அனுப்பம்பட்டு மற்றும் வன்னிப்பாக்கம், சிறுவாக்கம் , கங்கையாடி குப்பம் , புலிக்குளம் போன்ற ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கி அனுப்பம்பட்டு வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அனுப்பம்பட்டில் தான் இயங்கி வந்தது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க அலுவலகம் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு இயங்கி வந்தது. அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்கம் என்ற பெயர் தாங்கிய ஒரு அலுவலகம் வேறு இடத்தில் இயங்கி வந்ததை அனுப்பப்பட்டிற்கே மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரன் கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்.

அதன் விளைவாக கடந்த வருடம் வெளியூரில் இயங்கி வந்த அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க அலுவலகம் தற்போது மீண்டும் அனுப்பம்பட்டு ஊராட்சிக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிகழ்ச்சி அனுப்பம்பட்டு ஊராட்சியில் உள்ளடங்கிய அனைத்து சமுதாய மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த விடாமுயற்சியை சிறப்புடன் நடைமுறைப்படுத்தி கூட்டுறவு சங்க அலுவலகத்தை மீண்டும் அனுப்பம்பட்டிற்க்கு கொண்டு வந்த கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரனை அனுப்பம்பட்டில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பாராட்டி மகிழ்ந்தனர் எனக் கூறினார்.

மேலும் எங்களது அனுப்பம்பட்டு ஊராட்சியில் இதுவரை உத்தண்டி கண்டிகை பகுதியில் வெற்றி பெறக்கூடிய வார்டு உறுப்பினர்களுக்கு துணைத்தலைவர் ஆகும் வாய்ப்பு வழங்கப்பட்டது கிடையாது எங்கள் கிராம பெரியோர்களின் வேண்டுகோளை ஏற்று எங்கள் பகுதி வார்டு உறுப்பினர் துணைத் தலைவராக பல இன்னல்களுக்கிடையே வெற்றி பெற செய்த ஊ தலைவர் மகேஸ்வரனுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் எனவும் கூறினார்

சிறந்த மக்கள் பணியாற்றிய குடும்பத்தை சேர்ந்த வரும், சமூக பணியாற்றி வருபவருமான சசிபாபு அவர்கள் கூறுகையில்;
அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணியம்மாள் அவர்களும் மற்றும் அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களும் மிகச்சிறந்த மக்கள் நல பணிகளை அனுப்பம்பட்டு ஊராட்சியில் செய்து வருகின்றனர். குறிப்பாக இவர்கள் வரதா புயல் பாதிப்பின் போதும் கொரோனா பாதிப்பின் போதும் உமாமகேஸ்வரன் அனுப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகவும் வேகமாகவும், விவேகத்துடனும் மிகச்சிறந்த மக்கள் தொண்டாற்றினார். என்பதை நான் கூடவே இருந்து பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

குறிப்பாக வரதா புயல் பாதிப்பின் போது முதல் கட்டமாக மரம் அறுக்கும் இயந்திரங்களை கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டு வாசலில் கிடந்த மரங்களையும் ஆட்களை வைத்து வெட்டி அப்புறப்படுத்தினர். அனைவரும் முடங்கிப் போய்க் கிடந்த அன்றைய நிலையில், அவருடைய துரிதமான பணிகளை மக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அதேபோல் இந்த ஊராட்சியில் உள்ள 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலும் 3 ஜெனரேட்டர்கள் கொண்டு வந்து ஒரு வாரத்திற்கு தொடர்ந்து தண்ணீரையும் மேலேற்றி மின்சாரம் தடைபட்டு போனாலும் குடிநீர் வினியோகம் தடைப்படாமல் பார்த்துக்கொண்டார்.

அதே நேரத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து இது தங்கி பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கும் உணவுகள் மற்றும் அவர்களுடைய தேவைகளை அவர்களுடனேயே இருந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்தார். அவர்களை நாசுக்காக வேலை வாங்கி சில தினங்களிலேயே மின் தடைகளை நீக்கி அனுப்பம்பட்டு ஊராட்சி முழுவதும் மின்சாரத்தை வழங்கினார். (அன்றைய சூழ்நிலையில் பல கிராமங்களில் பத்து நாட்கள் கழித்து தான் மின்சாரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது) அதேபோல் பல தெருக்களில் தேங்கி கிடந்த மழைநீரை மின் மோட்டார் வைத்து உடனடியாக அப்புறப்படுத்தியது மக்கள் அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்தது.

அதே போலவே கொரோனா தொற்று பரவலின் போதும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து தன்னம்பிக்கையுடன் தைரியமாக இருக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் மூலமும் ஒலிபெருக்கிகள் மூலமும் விழிப்புணர்வுடன், அறிவுரைகளும் வழங்கி ஊராட்சி எல்லைப் பகுதிகளை தடைகளை ஏற்படுத்தி ஊராட்சி முழுவதும் சுகாதாரமாக இருக்கும் வகையில் மிகவும் கவனத்துடன் பாதுகாத்தார். மீஞ்சூர் வட்டார சுகாதார தலைமை அலுவலர் மருத்துவர் ராஜேஷ் அவர்கள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களும் கொரோனா பரிசோதனை முகாம்களும், தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்களும் இதுவரை பல நடத்தியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தோற்றுப் பரவலை தடுக்கும் விதமாக அரசு மக்கள் வெளியில் நடமாட தடைவிதித்து ஊரடங்கு பிறப்பித்து இருந்த நிலையில் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரம் இழந்து நின்றிருந்த மக்களுக்கு, 40 நாட்களுக்கும் மேலாக தினமும் மதியம் ஒருவேளை உணவு வழங்க ஏற்பாடு செய்தார். அதுமட்டுமல்லாமல் ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் அரிசி பருப்பு எண்ணெய் உட்பட மளிகை பொருட்களையும் வழங்கினார்.

இந்த இரண்டு பேரிடர் காலங்களிலும் அவரோடு நானிருந்து அவருடைய செயல்பாடுகளையும் நிர்வாகத் திறமையையும் மக்களுக்கு சோர்வில்லாமல் பணியாற்றும் விதத்தையும் பார்த்து வியந்து இருந்தேன் என கூறினார்.

பெரிய அனுப்பம்பட்டு பகுதியின் கிராம நிர்வாகியின் அரசு போக்குவரத்து துறை ஊழியருமான ஏ.கே மோகன் அவர்கள் கூறுகையில்;


எங்களுடைய பெரிய அனுப்பம்பட்டு பகுதியில் உமாமகேஸ்வரன் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற உடன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இப்பகுதியில் இரவை பகலாக மாற்றும் அளவிற்கு முதன் முதலாக உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன் பெற்று வருகின்றனர். அதேபோல் தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள உமாமகேஸ்வரன் அவர்களுடைய தாயார் கிருஷ்ணவேணி அம்மாள் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு இப்பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் சாலைகள் அளந்து அளவீடு செய்து சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சிறிய சிறிய குறுக்கு தெருக்கள் கூட ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த தெருவில் சிமெண்ட் கற்கள் பதித்த சாலைகளை சிறப்புடன் அமைத்து வருகிறார். இப்பகுதியில் இருந்து வரக்கூடிய செல்லியம்மன் கோயில் மற்றும் பெருமாள் கோயில் முன்புறம் இருந்த மண்டபம் பகுதிகளில் ஏற்கனவே சிமெண்ட் ஓடுகள் அமைக்கப்பட்டு இருந்ததை மாற்றி தற்போது தலைவருடைய சொந்த முயற்சியால் தளம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

செல்லியம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பெண்கள் பால்குடம் எடுத்து சென்று அம்மனுக்கு திருவிழா நடத்தக்கூடிய வாய்ப்பை ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுத்திக் கொடுத்து கிராம நிர்வாகிகளுக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக நடத்தியும் கொடுக்கிறார். என கூறினார்.

அனுப்பம்பட்டு ஊராட்சியில் வேளப்பாக்கம் பகுதியில் வசிக்கும் சிறுவாக்கம் ஊராட்சி மன்ற உறுப்பினர் மனோகரன் அவர்கள் கூறுகையில் ;


சிறுவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இலவம்பேடு ஏரிக்கரை பகுதியில் நாங்கள் குடி இருந்து வந்தோம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிக்கரை மீது கூடியிருந்த எங்களை அப்புறப்படுத்தி வெளியிட்டனர். அப்போது அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரன் அவர்கள் எங்களுக்கு உதவும் வகையில் இப்பதவியை அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுப்பதற்கு உறுதுணையாக இருந்து பழங்குடியின மக்களான எங்கள் 56 குடும்பத்தினரை இந்த வேளப்பாக்கம் பகுதியில் குடியமர்த்தியதுடன்
எங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை தேவைகள் அனைத்தும் ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக செய்து கொடுத்தார்.

அதுமட்டும் இல்லாமல் நாங்கள் குடியிருந்த குடிசை வீடுகளை ஒரே ஆண்டில் …. மேற்பட்ட வீடுகளை மாற்றி கல் வீடுகளாக கட்டுவதற்கு பணிகள் துவங்கப்பட்டு அவைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஒரு சில மாதங்களில் அவர்கள் அனைவரும் இந்த புதிய வீட்டில் குடியேற உள்ளனர். மேலும் இதே பகுதியில் அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த மக்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கும் கூடிய விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு அவர்களும் இங்கு கூடி இருக்க வழிவகை செய்யப்பட உள்ளது என்ன ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த அளவிற்கு வேளப்பாக்கம் பகுதியில் ஏழை எளிய மக்கள் சிறப்புடன் வாழ வழிவகை செய்யப்பட்டது அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் தான் என்பதை நாங்கள் என்றென்றும் மறக்க மாட்டோம் என நெகழ்ச்சியுடன் கூறினார்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *