January 18, 2022

சேலம் அருகே உள்ள தீண்டாமை சுவற்றை அகற்றக்கோரிகிராம மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்…

1 min read
Spread the love

சேலம் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பழையகாலனி அருகே உள்ள தீண்டாமை சுவற்றினை அகற்றக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், வெள்ளாளப்பட்டி பழையகாலனி பகுதி ஊர் பொதுமக்கள் நல்லதம்பி, சாமிநாதன், ரவி, ஆறுமுகம் மற்றும் 4வது வார்டு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் வழக்கறிஞர் வெ.மா.சடையவர்மன் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் பொது மக்கள் சார்பில் மனு ஒன்றினை அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது; சேலம் வெள்ளாளப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் 1,000 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள சந்தைபேட்டையில் இருந்து ஆதிதிராவிடர் மயானம் வரை செல்லும் சாலையின் இருபக்கமும் ஆக்கிரமிப்புகள் உள்ளது.

இதனால் ஊருக்குள் அவசர காலத்தில் 108 ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத நிலை உள்ளது. பள்ளி கல்லூரி வாகனங்களும் வந்து செல்ல முடியவில்லை. ஊர் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்து கொடுக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

மேலும் ஆதிதிராவிடர் மக்களுக்கு பாத்தியப்பட்ட பொது கிணற்றினை தூர்வாரி ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றி அதன் அருகில் உள்ள தீண்டாமை சுவற்றினை அகற்ற வேண்டும். பெண்களுக்கு கழிப்பிட வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும். பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டுத் திடல் அமைத்துக் கொடுக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியார் – தங்கதுரை
நிழல் . இன் – 893947677

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *