January 18, 2022

திருவண்ணாமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர், வேலூர் சாலையில் அண்ணா நுழைவு வாயில் அருகே விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை…

1 min read
Spread the love

திருவண்ணாமலை – வேலூர் – காஞ்சி சாலையில் அதிக விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ள காரணத்தினால் புதிதாக போக்குவரத்து காவல் துறையினரை நியமித்து போக்குவரத்து சரி செய்யும் நடவடிக்கையில் திருவண்ணாமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாலையில் தடுப்புகளை அமைத்து உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஆலோசனையின் பேரில், திருவண்ணாமலை ஏஎஸ்பி கிரண் சுருதி மேற்பார்வையில், போக்குவரத்து துறை ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் இந்த விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *