January 18, 2022

தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம் 2021-22 ம் கல்வி ஆண்டிற்கான, 84 முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை வெற்றிக்கரமாக நடத்தபட்டது…

1 min read
Spread the love

️2021-22 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் , மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல் மற்றும் அடிப்படை அறிவியல் ஆகிய புலன்களில் உள்ள 84 முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை வெற்றிக்கரமாக நடத்தியது. இம் மாணவர் சேர்க்கையானது பொன்னேரி டாக்டர். எம்.ஜி.ஆர் . மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டிசம்பர் 09,10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதலாம் நாளான 09-12-2021 அன்று, இச்சேர்க்கைக்காக விண்ணப்பித்து இருந்த 110 மாணவர்களில் 80(எம்.எப்.எஸ்சி-37;எம்.டெக்-1;பிஎச்.டி-42) பேர் இம்மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வில் கலந்துக்கொண்டனர்.
இந்நுழைவு தேர்வானது , மீன்வள அறிவியலில் உள்ள பதிமூன்று துறைகளில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கும், ஓரு மீன்வளப் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்புக்கும் நடத்தப்பட்டது.

நுழைவுத்தேர்வின் முடிவானது ,தேர்வு நடைபெற்ற அதே நாளில் பல்கலைக்கழக இணைய தளத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலோடு வெளியிடப்பட்டது.
இரண்டாம் நாளான 10-12-2021 அன்று, தரவரிசைக்கேற்ப மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களும் தகுதிப்பெற்ற மாணவர்களால் நிரப்பப்பட்டது. மாணவர்களின் தரவரிசை மற்றும் விருப்பத்திற்கிணங்க கல்லூரி இடத்தேர்வுகள் நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலிதா மீன்வளப்பல்கழகத்தின் துணைவேந்தர் கோ.சுகுமார், அவர்கள் மாணவர்களுக்கான தற்காலிக சேர்க்கை ஆணையினை வழங்கினார் . இம்மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை முதுநிலை மாணவர் சேர்க்கைக்குழு தலைவர் , முனைவர் .பா.ஜவஹர்,அவர்கள், 2021-22 ஆம் ஆண்டிற்கான முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் உதவியோடு ஒருங்கிணைத்தார்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *