January 18, 2022

மாநகராட்சி ஜேசிபி மோதியதில் மின்கம்பம் சேதம் உரிய நேரத்தில் மின் இணைப்பைத் துண்டித்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…

1 min read
Spread the love

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோவில் தெருவில் இன்று மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது அப்பொழுது பின் நோக்கி வரும் பொழுது எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த மின்கம்பத்தில் பலமாக மோதியது.

இதில் மின்கம்பம் இரண்டாக உடைந்து தொங்கியது உடனடியாக அக்கம் பக்கத்தினர் மதுரை பழங்காநத்தம் மின்வாரிய பொறியாளர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கொடுக்கவே, அவர் உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மின் பொறியாளர்கள் மற்றும் மின் ஊழியர் மின் உடனடியாக புதிய மின் கம்பத்தை நடுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்தனர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது கடந்த மாதம் இதே போன்று மாநகராட்சி வாகனம் மோதி பழங்காநத்தம் இருளப்ப சாமி கோவில் தெருவில் மாநகராட்சி வாகனம் மோதி மின்கம்பம் உடைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பல இடங்களில் மின்கம்பங்கள் உடைந்து விபத்து ஏற்பட்டு மின் ஊழியர்கள் உயிரிழக்கும் கூடிய சூழ்நிலை நிலவுகிறது.
பேசாம, மின்கம்பம் சிமெண்ட் கம்பியால் தயாரிப்பதை விட மரத்தில் நாட்டு வைத்தாலாவது மின் ஊழியர்களுடைய உயிருக்கும் பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பாக இருக்குமோ…

செய்தியாளர் –
வி காளமேகம்
/மதுரை மாவட்டம்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *