January 18, 2022

கொரட்டூர் இன்னர் வீல் கிளப் மற்றும் சென்னை கொரட்டூர் ரோட்டரி கிளப் சார்பில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம்…

1 min read
Spread the love

சென்னை அடுத்த கொரட்டூர் இன்னர் வீல் கிளப் மற்றும் சென்னை கொரட்டூர் ரோட்டரி கிளப் சார்பில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு உதவி பொருட்கள் வழங்கும் விழா வேப்பேரி பாலர் கல்வி நிலையத்தில் இன்னர்வீல் கிளப் தலைவர் ராணி தலைமையில் நடைபெற்றது.

இதில் கிறிஸ்துமஸ் ஆடல் பாடல் நிகழ்ச்சி பரிசளிப்புகள் நடைபெற்றன. இதில் சென்னை விருட்சம் சுஜாதா, மெட்ராஸ் போர்ட் கந்தா பிசானி, கிண்டி அம்பிலி நந்தகோபால், சென்னை போனிக்ஸ் டாக்டர் விஜயலட்சுமி, மெட்ராஸ் மிட்டவுன் டாக்டர் சபிதாகவுனி, சென்னை ஹார்மோனி மரிய கவுஸர், சென்னை மெலோடி ஜானகி ராம்குமார், சென்னை கேலக்ஸி அகிலா சுரேஷ், குழு உறுப்பினர் அஸ்வினி தீப் கமல், உட்பட திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – மில்டன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *