January 18, 2022

புழல் அருகே, கதிர்வேட்டில், பொங்கல் திருநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில், ஏழை எளிய தாய்மார்களுக்கு வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…

1 min read
Spread the love

சென்னை புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் இருபத்தி ஐந்தாவது வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 10 ஆயிரம் ஏழை எளிய முதியவர் மற்றும் தாய்மார்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராஜன் பர்ணபஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் கே ஜெயக்குமார் அவர்கள் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகளை வழங்கினார்.

கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்ற சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு பொங்கல் திருநாள் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருவேற்காடு ரமேஷ்,
சங்கீதா பாபு , காங்கிரஸ் பிரமுகர் பாபு, உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ராஜன் பர்னபாஸ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்த புடவை வேட்டி உள்ளிட்ட பொருட்களை பெற்று கொண்ட அப்பகுதி மக்கள் ராஜன் பர்னபாஸ் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.

செய்தியாளர் – ரஞ்சித்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *