January 18, 2022

ஜல்லிகட்டு காளைகளை, பாசக்கயிற்றால் கட்டி செல்லப் பிராணிகளாக வளர்க்கும் பெண்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்…

1 min read
Spread the love

ஜல்லிக்கட்டின் போது வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து ஓடி வரும் முரட்டு காளைகள் தன்னை அடக்க வரும் இளைஞர்களை களத்தில் தூக்கி வீசி பந்தாடுவது வழக்கம் அப்படிப்பட்ட காளைகள் தங்களை வீட்டில் பராமரிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் சிறு பிள்ளையை போல் அமைதியாக அவர்களை சுற்றி, சுற்றி வருவதை நம்மால் காணமுடியும்.

உதாரணமாக, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே உள்ள வைக்கம் பெரியார் நகரில் லூர்து மேரி என்பவர் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார் . அந்தக் காளைகள் அவர் சொல்படி கேட்டு மிகவும் அமைதியாகவும் குழந்தையைப் போல் அவர் பின்னால் செல்வது பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.

அதே போல், அதே பகுதியை சேர்ந்த, இந்திராணி என்பவர் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளையும் சீறிபாய்ந்தாலும் அவரிடம் அமைதியாக செல்லப்பிராணியாக திரிவதை நம்மால் காண முடிகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால், அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அந்த கட்டுப்பாடுகளில் மாற்றம் தேவை என கிராம பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் அரசுக்கு பல விதமான கோரிக்கைகளை வைத்துள்ளனர். இந்நிலையில் முரட்டுக் காளைகளை குழந்தையை போல் வளர்க்கும் பெண்களும் ஜல்லிக்கட்டு நடைமுறையில் சில மாற்றங்கள் தேவை என கோரிக்கை வைக்கின்றனர்.

அதில் குறிப்பாக, நடப்பு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெற கிராமத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அப்படி பதிவு செய்வது மிகவும் சிரமமாக உள்ளது என்றும் முன்பு போல் கால்நடைத்துறை அதிகாரிகள் மூலமாகவோ அல்லது கிராம நிர்வாக அலுவலர் மூலமாகவோ ஜல்லிக்கட்டு காளைகள் பங்குபெற பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் –
வி காளமேகம்
மதுரை மாவட்டம்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *