Category Archives: Uncategorized

Nizhal Pathiyam Film Academy

சென்னை வளசரவாக்கத்தில் நிழல் -பதியம் பிலிம் அகாடெமியின் திறப்பு விழா ஜூலை 15 வெள்ளி அன்று நடை பெற்றது . நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று பதியம் பாரதிவாசன் பேசினார் .. நிழல் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார் …..இந்த விழாவில் டி .கே .எஸ் .இளங்கோவன் எம் .பி அகாடமியின் அலுவலகத்தை திறந்து வைத்தார்… இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் குத்துவிளக்கேற்றினார் .. ஓவியர் மருது நிழல் பதியம் அகாடமியின் nipfa .com இணைய தளத்தை துவக்கிவைத்தார்…. பின்னர் நடந்த நிகழ்வில் மும்பையில் இருந்து வந்திருந்த ஆவணப்பட இயக்குனர் மதியழகன் சுப்பையா யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்த தேவர் அண்ணா பாஸ்கர் உட்பட தமிழகம் முழுக்க நிழல் பதியம் சார்பில் நடைபெற்ற பல குறும்பட பயிற்சி பட்டறைகளில் கலந்து கொண்ட பல மாணவர்களும் தங்கள் திரைப்பட பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் .அதனைத் தொடர்ந்து உறுமீன் திரைப்பட இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி ,அவள்பெயர் தமிழரசி இயக்குனர் மீரா கதிரவன் ,கவிதாபாரதி ,ஓவியர் மருது ,ஜனநாதன் ,முதலியோர் தாங்கள் நிழல் பதியம் பிலிம் அகாடமிக்கு வந்து மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பது உட்பட அனைத்து உதவிகளும் தொடர்ந்து செய்வதாக தெரிவித்தனர் .நிகழ்வில் இயக்குனர் கி.ரா ,காமெராமேன் ஆம்ஸ்ட்ரோங் ,பாடலாசிரியர் அறிவுமதி, நந்தன் ஸ்ரீதரன், கேபிள் சங்கர் உட்பட பல உதவி இயக்குனர்களும் திரைப்பட துறை சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர் .
எடிட்டர் பொன்குமார் நன்றியுரையாற்றினார்….
மேற்கண்ட நிகழ்வை நிழல் திருநாவுக்கரசு பதியம் பாரதிவாசன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்…..

Nizhal Pathiyam Film Academy

NIPFA pamplet

NIPFA

——————————————————————————————–

நண்பர் நந்தன் ஸ்ரீதரன் எழுதியதும் சட்டென தவறிழைத்த மனநிலை தோன்றியது…
நிழல் ஒரு திரைப்பட நிறுவனம் தொடங்கி இருக்கிறது..
நிழலின் நிழலில் படர்ந்தவன் நான்..நான் எழுத வேண்டாமா..
நிழல் முதலில் தாமரைச் செல்வி பதிப்பகமாக இருந்தது.
நான் சினிமாவை தொடங்கிய நேரம்..கற்க..
பொதுவுடைமையின் தீராத தாகம் நண்பன் உமர் வழியாக திருநாவுக் கரசு அவர்களிடம் சேர்த்தது..
விரல் நுனியில் வானம்..பல்வேறு தகவல் களஞ்சியமாக அரசு இருந்தார்…பேசப் பேச தீராத நேரங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார்…
சிவக்குமார் என்கிற விசுவாமித்திரன்,ஹவி,சித்ரா,உமர்,..ஸ்டாலின் ராஜங்கம்,காமராஜ்,இளம்பருதி,மாரி மகேந்திரன் ,என முன்பின்னாக அறிவார்ந்த குழுமம்..விஸ்வாஸ் திரைப்பட நிறுவனத்திலிருந்து பல உலகப் படங்கள் கேசட்ஸ் திருடி நண்பர்களிடம் கொடுப்பதும்..நண்பர்கள் விசுவாமித்திரன் அறையில் சித்த மருந்து பொடி செய்தபடி திரைப்பட குறு விழாக்கள் உருவாக்கி மகிழ்ந்ததுமான காலம்..நிறைய அறிமுகங்கள் அனைவரின் பெயரையும் குறிப்பிட இயலாது…நீண்ட பட்டியல்..
எம்கி ஆர் படங்களில் இருந்து புதிய கதவை எனக்கு திறந்தவர்கள் அவர்களே..ரசியன் கலாச்சார மையம்,தென்னிந்திய வர்த்தக சபை தொடங்கி அனைத்து விழாக்களையும் மகிழ்வோடு பார்ப்போம்..இலக்கிய அறிமுகமும் விசுவாமித்திரனின் புணர் இதழ் கவிதைகளில் தொடக்க கேள்விகளில் தொடங்கியது..முன் பின்னாக ரசனை மாற்றம் பெற்ற பெருங்காலம் அது..
அப்பொழுதுதான் நிழல் துவங்கப்பட்டது..உமர் அதன் ஓயாத தொடர்பாளன்..விநியோகி பரப்புரையாளன்..
நிழல் தொடக்கத்தில் உதவி செய்வதாக சொன்ன பலரும் மறுத்ததும்,சிலர் தானே முன் வந்து உதவியதுமான பெருந்தொடர் நிழலினுடையது…\
நிழலுக்காக நானும் உமருடன் பயணப்பட்டிருக்கிறேன்..
2002 சிலம்பு குறும்பட விழாவை டான் பாஸ்கோவில் அஜயன் சிலருடன் நின்று ஒருங்கிணைத்தார்..லீனாவின் மாத்தம்மா விற்கு நண்பர் இளம்பருதி குழுவுடன் எதிர்ப்பு தெரிவித்தார்..முத்துகிருட்டிணனின் சே பற்றிய ஆவணப் படத்திற்கு நிழலுக்காக பேட்டியும் எடுத்தேன்..
அரசு அவர்களுடன் தொடங்கி பதியம் பாரதிவாசனிடம் தொடர்பு ஏற்பட்டு திருப்பூரில் நடைபெற்ற குறும் பட விழாவில் எனது ”தமிழு” குறும்படமும் திரையிடப்பட்டது..அங்கே சலசலப்பையும் நான் உண்டு பண்ணிய நினைவுண்டு..
நிழலின் அயராத முயற்சிகள் அரசு-வாசன் கூட்டணியில் மேலும் பலவாக விரிந்தது..
ரோகாந்த்,என் செல்ல” ஜோ” வின் பணியும் உடனிருந்தது..
இன்று வரை பயிற்சி பட்டறை என விரிந்து மிக சரியான ஒரு திரைப்பட பயிலகமாக வளர்ந்திருக்கிறது…
திரைப்படங்கள்..குறும்படங்கள் என நிழலும் அரசு அவர்களும் மேலும் அண்ணியாரின் பெரும் உழைப்பும் கூடிய சமூக மாற்ற குரலாக நிழல் வளர்ந்த காலங்களில் பலர்..சுய அரிப்புக்காக திரைப்பட புத்தக முயல்வுகளை மேற்கொண்டு தோற்ற வரலாறும் உண்டு…குறும்பட தாக்கத்தை தமிழகத்திற்கு உண்டு பண்ணியது நிழல் மட்டுமே..தமிழ்நாடு முழுக்க எந்த குறும்படம் எடுக்கப்பட்டாளும் நிழல்-அரசிடம் வந்து சேரும்..இதன் வளர்ச்சியை அதன் அரசியலை உடைக்க முயன்றது கலைஞர் தொலைக்காட்சியின் குறும்பட கோலங்கள்..
நிறைய எழுதலாம்…
முரண்கள் இருந்ததும் உண்மை…தாய்க்கும் பிள்ளைக்குமானவை அவை…
நான் இருந்த இராணி அண்ணா நகரில் நிழல் தொடங்கியது..நினைவுப் பெருவெள்ளத்தில் நீந்தி எமது மெர்லின் திரைப்படத்தில் நிழலின் காலங்களை துளியாவது பதிவு செய்த பெருமிதத்தில் சொல்கிறேன்…
சினிமாவை சரியாக கற்க…
நிழல் பட்டறையில் தஞ்சமடையுங்கள்…
நன்றி..

-வ. கீரா

https://www.facebook.com/mathivathanidhanam/posts/1145010662230638?pnref=story

——————————————————————————————–

அரசு என்று அவரை அழைப்பேன். நிழல்திருநாவுக்கரசு என்றால் நண்பர்களுக்குத் தெரியும்..
அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம்.. பாளையம் காலேஜ் என்பது உருப்படாதவர்களுக்கான காலேஜ் என்பது பொது விதி. எந்த ஒரு வருடத்திலும் கல்லூரி அதிகபட்சம் 150 நாட்கள்தான் நடந்திருக்கும். மற்ற கல்லூரிகளில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள் எல்லாரும் கூட அந்த கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்.
அப்படியாகதான் சரவணகுமார் என்ற நண்பன் எனது மூன்றாமாண்டு கல்லூரி நாட்களில் வந்து சேர்ந்தான். அவன் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கல்லூரியில் இருநது வெளியேற்றப்படவில்லை.. அவனது அப்பா பேங்க் ஆபீசர். அதனால் டிரான்ஸ்ஃபர். அதனால் அவன் நெல்லையில் இருந்து பாளையத்தில் வந்து கல்லூரியைத் தொடரும்படி ஆனது..
ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால் அவனும் கதைகள் படிப்பான்.. அந்த காலத்து வாத்சல்யமான எல்லா எழுத்தாளர்களும் அவனுக்கும் பிடித்திருந்தது கூடுதல் நெருக்கத்தைக் கொடுத்தது. லீவு நாள் என்றால் அவன் வீட்டுக்குப் போய் விடுவேன்..
அப்போதுதான் அவன் ரோகாந்த் பற்றி சொன்னான். பதினைந்து வயதிலேயே ரோகாந்த்தின் கதை கணையாழியில் வந்திருந்தது என நினைக்கிறேன். பார்த்தால் ஜெயகாந்தன் போலவே அல்லது பாலகுமாரன் போலவே அவனும் பத்தாம்ப்பு முடித்ததும் ஜனசக்தியில் சேர்ந்து விட்டான்.. இப்படியாக ரோகாந்த் பெருமையோடே மெல்ல மெல்ல பின்னாட்களில் அறிமுகமானது நிழல் என்ற திரைப்பட இயக்கம்..
கல்லூரியெல்லாம் முடிந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு அரிஅரவேலன் புண்ணியத்திலா இல்லை யாருடைய புண்ணியத்தில் என்று தெரியவில்லை. முனை மடங்கி அட்டை மடங்கிய நிழல் பத்திரிக்கை ஒன்று என் கைக்கு வந்து சேர்ந்தது.. அதில் சினிமா பற்றி அவ்வளவு செய்திகள்..
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வயது வளர வளர தேடித் தேடி படித்ததில் நிழல் பற்றி நிறைய புரிந்து கொள்ள முடிந்தது. தற்கொலைக் காலமான பத்தாண்டுகள் முடிந்தபின் சென்னைக்கு வருகிறான் நந்தன் ஶ்ரீதரன்..
இங்கு வருவதற்கு முன்பே திருநாவுக்கரசுவைப் பற்றி கேள்விப் பட்டிருந்தான். திருநாவுக்கரசு, ஜோ ஜார்ஜ், ரோகாந்த் இவர்களுடன்தான் நிழலின் நினைவும் அவனுக்குள் இருந்தது. பின்னர் இளஞ்சேரன் என நினைக்கிறேன்.. எதோ ஒரு நண்பர் அரசுவை நந்தனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அப்படியாக துவங்கியது ஒரு நட்பு. அது அரசுவுக்கு கூட நினைவில் இருக்காது என நினைக்கிறேன்..
அப்புறம் இரண்டு மூன்று முறை அலைபேசி வழி பேச்சு வார்த்தையோடு முடிந்து போனது அரசுவுடனான நட்பு.. ஆனாலும் நேரமும் காசும் கிடைக்கிறபோதெல்லாம் நிழல் பத்திரிக்கையை வாங்கி படித்தபடி இருப்பான் நந்தன்..
உண்மையில் அரசு என்ற எளிய மனிதனின் சினிமா ஞானம் அவன் நினைத்து நினைத்து வியக்கும் ஒரு விஷயம்.. இவ்வளவு அறிவை வைத்துக் கொண்டு இந்த மனிதன் என்னத்துக்கு வெறும் நிழல் என்ற பத்திரிக்கையுடன் நின்று போக வேண்டும் என்றே நந்தன் நினைத்தபடி இருப்பான்..
ஆனால் அரசு அத்துடன் நிறுத்தவில்லை. தன் அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் நிழல் பயிற்சிப் பட்டறைகளை மாநிலம் முழுக்க நடத்தத் துவங்கினார். எனக்குத் தெரிந்து அத்தனை இளைஞ்ர்கள் அவரது பட்டறையில் படித்துத் தேறி இருக்கிறார்கள்.. அதிர்ஷ்டவசமாக ஒரு பயிற்சிப் பட்டறையில் ஒரு மணி நேரம் நானே நேரில் சென்று பார்த்திருக்கிறேன்..
வெறும் பத்து நாள் பயிற்சியிலேயே தன் மாணவர்களை குறும்படம் எடுக்கும் அளவுக்கு வளர்த்து விட்டிருக்கும் அவரது ஆற்றலை நான் ஆச்சரியத்தோடு கவனித்திருக்கிறேன்..
எனக்குத் தெரிந்து சினிமா பற்றி கொஞ்சமும் தெரியாத நிறைய பேர் திரைப்படக் கல்லூரி நடத்துவதை நான் கண்ணால் பார்ததிருக்கிறேன். சினிமாவில் எழுபது எண்பது வருட காலம் இருககிறார்கள் என்ற தகுதியை வைத்தே சில நிறுவனங்கள் திரைப்படக் கல்லூரி துவங்கி ஆறு மாத கோர்சுக்கு நாலரை ஐந்து லட்சம் வசூலித்ததையும் நான் பார்த்திருக்கிறேன். இதுமாதிரியானவர்களை விட மிக நிச்சயமாக ஐயாயிரம் மடங்கு உயர்ந்த அறிவுள்ளவர் அரசு..
நம்ம தம்பிகளிடம் அடிக்கடி சொல்லியபடி இருப்பேன். இத்தனை திரையறிவை வைத்துக கொண்டு என்ன செய்யப் போகிறார் திருநாவுக்கரசு..? ஒரு இன்ஸ்டிட்யூட் துவங்கி அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டியதுதானே என்று..
அது அவரது காதுக்குப் போகும்முன் சரியாக முறைப்படி திரைப்படக் கல்லூரியை துவங்கிவிட்டார் நண்பர் அரசு..
நிழல் பதியம் திரைப்பட அக்காடமி என்பது அதன் பெயர்.. எனக்குத் தெரிந்து இத்தனை சிறப்புகளும் தகுதிகளும் உள்ள வேறு எந்த திரைப்படக் கல்லூரியும் தமிழகத்தில் இல்லை என்பேன்..
மற்ற பணக்காரர்களுக்கான நிறுவனங்கள் போல அல்ல இந்த அக்காடமி.. நம் மக்களுக்கான நியாயமான கட்டணங்களுடன் மிக மிக தகுதி உள்ள டெக்னிஷியன்களுடன் துவங்கப் பட்டுள்ளது இந்த அக்காடமி.. உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை நீங்கள் புரிந்து கொண்டு சினிமா படிக்க சரியான நிறுவனம் என் நண்பர் அரசுவின் நிறுவனம்..
தம்பிகள். நண்பர்கள்.. சினிமாவை கற்று சிறக்க விரும்புபவர்கள் அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் அக்காடமி இதுதான்..
நான் சொல்வதை விட மிகச் சிறப்பாக ஜனா அண்ணன் என நான் அழைக்கும் இயக்குனர் எஸபி ஜனநாதன் அரசுவின் இந்த அக்காடமி பற்றி மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார்..
ஆகஸ்ட்டு ஒன்றாம் திகதியிலிருந்து இந்த நிறுவனம் துவங்கப் போகிறது. உண்மையான சினிமாவை கற்றுக் கொள்ள விரும்பும் அனைத்து டெக்னிஷியன்களும் தேடிப் போக வேண்டிய நிறுவனம் இது..
இணையப் போகும் தம்பிகள் அனைவருக்கும் எனது மனப் பூர்வமான வாழ்த்துகள்..

– நந்தன் ஸ்ரீதரன்
https://www.facebook.com/Pathiyam.Bharathivasan/posts/10208962040282618

39th Book Fair

39வது சென்னை புத்தக கண்காட்சி 01- 13 ஜூன் 2016, தீவுதிடல், சென்னை
39th Chennai Book Fair – 01 – 13 June 2016, Theevuthidal, Chennai

நிழல்
கடை எண் : 616 முன்றில்
Shop No: 616 Muntril

43 Nizhal Shortfilm Workshop

43வது நிழல் பயிற்சிப்பட்டறை, ஈரோடு ஸ்ரீ அம்மன் கலை அறிவியல் கல்லூரி, சித்தோடு

20 43NizhalWS day4M

முதல் நாள் தொடங்க விழா…

நடிப்பு பயிற்சி – சுரேஷ்வரன் (கூத்துப்பட்டறை)

திரைக்கதை வகுப்பு – திரு. கலைச்செல்வன்

ஒளிப்பதிவு & ஒளியமைப்பு – திரு. மோகன ரங்கம்

ஒப்பனை – திரு. ரகுமான் பாட்ஷா

படத்தொகுப்பு – திரு. பொன் குமார்

மாணவர்கள் படம் எடுப்பது

41 Nizhal Shortfilm Workshop

நிழல்-பதியம் 41வது குறும்பட பயிற்சி பட்டறை சென்னையில் உள்ள குன்றத்தூரில் இனிதே நடந்தது. சுமார் 25 மாணவர்கள் பங்கு பெற்றனர். உறுமீன் இயக்குனர் சக்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

41 WS Group

தொடக்க விழா மற்றும் திரைப்பட இலக்கன வகுப்பு

புகைப்படம் மற்றும் ஒளியமைப்பு – ஶ்ரீதர் ( மாலை நேரத்து மயக்கம்)

படத்தொகுப்பு – பொன்குமார்

மாணவர்கள் படம் எடுத்தல்

மாணவர்கள் அனுபவ பகிர்வு

உறுமீன் இயக்குனர் சக்தியுடன் ஒரு சந்திப்பு

சாண்றிதழ் தருதல்

41 group main chennai

Nizhal Editing class batch6

நிழல் படத்தொகுப்பு வகுப்பு, குழு- 6க்கான பயிற்சி இன்று துவங்கியது. 09-Jan-2016
தொடர்புக்கு 9444484868

batch6 editing class poster1

40 Nizhal Shortfilm Workshop

40 நிழல் பயிற்சிப் பட்டறை / Nizhal Shortfilm Workshop

contact : 9444 48 48 68 arasunizhal@gmail.com

நிழல் விருது
நிழல் நடத்திய முப்பெரும் விழா
——————————————-
இந்தாண்டு நிழலுக்கு 15வது ஆண்டு
குறும்பட பயிற்சி பட்டறை தொடங்கி 10வது ஆண்டு
கிராமத்தில் திரை இடல் தொடக்கி 20வது ஆண்டு
—————————————————————-
இந்த முப்பெரும் விழாவை நடத்த தேர்ந்தெடுத்த இடம் திருச்சி ;
40தாவது குறும்பட பயிற்சி பட்டறை நிறைவு நாளில் நடத்தினோம் .

26.09.15 காலை திருச்சியில் நிழல் – பதியம் சார்பாக துவங்கிய குறும்படப்பயிற்சி பட்டறையில்…..
உள்ளூர் பிரமுகர்கள், திரைப்படச்சங்க நிர்வாகிகள், மற்றும் நிழல் திருநாவுக்கரசு.. மற்றும் நான். உடன் பங்கேற்பாளர்கள்

நமது பட்டறையின் சிறப்பம்சங்களில் ஒன்று வந்த மாணவர்கள் அனைவருக்கும் உணவளிப்பது.

நிழல் இதழிலில் 15ஆண்டுகளாக எழுதிவரும் விட்டல் ராவ் ;திரு நின்ற ஊர்
சந்தன கிருஷ்ணனுக்கும் பதியம் வாசன் வழங்கினார் .
ரெட் டீ நாவல்,மிளி ர்கல் ,நாவல் மற்றும் ‘நாளி ‘ஆவணப்படம் இயக்கியமைக்காக
வழக்குரைஞர் ,இரா .முருகவேளுக்கு ,விட்டல்ராவ் விருதை வழங்க ,வாசன் பொன்னாடையை
அணிவித்தார் ;பச்சை ரத்தம் ‘ஆவணப்படம் இயக்கிய தவமுதல்வனுக்கும் சண்முகராஜு க்கும்
ஆவணப்பட முன்னோடி ஏகே செட்டியார் நினைவு விருது வழங்கப்பட்டது ;இது போலவே
குறும்பட முன்னோடி ‘கலைவாணர் விருது ‘கடமை -பாலசுப்ரமணினுக்கும் ,”மறைநிரல் ”வசந்துக்கும் சதீசுக்கும் வழங்கப்பட்டது
இனி ஒவ்வோராண்டும் வழங்கப்படும் .

இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் உடன் ஒரு சந்திப்பு

Group Discussion

Basic camera technics, short divisions, angles, and handled done by Dass Arulsamy

Makeup Class by Rahman

Editing

Working Still

Certificate

40 group main2