Monthly Archives: April 2013

Thiruvalluvar Thiraipattarai3

திருவள்ளுவர் திரைப்பட்டறை நிகழ்த்திய மூன்றாம் ஆண்டு :

[flagallery gid=28 name=”Thiruvalluvar_Thirai_3″].

குறும்படப் போட்டி ஏப்ரல் 14ந் தேதி அமைந்தகரை மேத்தா நகரில் நடைபெற்றது. இதில் 4 3 படங்கள் தேர்வுக்கு வந்தன. அவற்றில் பிரான்சில் இருந்து நான்கும் அமெரிக்காவில் இருந்து இரண்டும் வந்தது குறிப்பிடத்தக்கது.

காலை 9 மணிக்கு விளையாட்டு திடல் எதிரே இருந்த அரங்கில் முத்துரெட்டியார், திருக்குறள் தாமோதரன், நிழல் ஆசிரியர் தொடங்கி வைத்தனர். தொடர்ச்சியாக 4 3 படங்களும் திரையிடப்பட்டு 10 படங்கள் தேர்வு செய்யப்பட்டன.

மாலை 5:30மணிக்கு விளையாட்டு அரங்கில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் இயக்குநர் பாலுமகேந்திரா, டாக்டர்.திருநாவுக்கரசு, பேரா.இரவி, திரைப்படத் தயாரிப்பாளர் நந்தகோபால், நடூவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குநர் பாலாஜீ தரணீதரன், ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவ், முன்னிலையில் படங்கள் திரையிடப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தேர்வு பெற்ற படங்கள்

முதல் பரிசு : செவ்வாழை‍ -சைமன் ஜார்ஜ்- 5000
இரண்டாம் பரிசு : தாகபூமி -அன்பு ராஜசேகர்- 3000
மூன்றாம் பரிசு : சக்கை -அருண்ராஜா -2000

சிறந்த நடிப்பு :திரைப்பயணம் –சதாபிரணவன்- 1000
சிறந்த கதைக்கரு : 14/6 பாலாஜிசுப்பிரமணியன்- 1000
சிறந்த திரைக்கதை : மெளனமொழி –ஜெய்சந்திரஹஸ்மி- 1000
சிறந்த ஒளிப்பதிவு :காணவில்லை –பிரபாகரன்- 1000
சிறந்த படத்தொகுப்பு : பெப்பே -நாகராஜ் -1000
சிறந்த இயக்கம் :கனவே கலையாதே -மணிகண்டன்
சிறந்த பார்வையாளர் விருது : கசடறு -ரவிச்சந்திரன்