Monthly Archives: May 2013

இந்திய சினிமாவுக்கு நூறு வயசு

1. இந்திய சினிமாவுக்கு நூறு வயது [தமிழ்]

உலகப்படங்களை தெரிந்த அளவுக்கு இந்தியப்படங்களை இன்றைய தலைமுறையினர் பார்க்கவில்லை என்கிற வருத்தம் எனக்குண்டு. இந்திய இளம் இயக்குநர்கள் உலகப்படங்களின் தரத்திற்கு நமது படங்கள் வரவேண்டும் என்கிற நோக்கில் 1960 முதல் 1980 வரை பல முயற்சிகளை செய்தனர். அவற்றில் சில படங்கள் உலக அளவில் சில பரிசுகளையும் பெற்றன. அவற்றை மொழிவாரியாக தொகுத்து உங்களுக்கு தருவதற்கு முன்பாகவே நிழல் 2008 ஜூலை இதழில் பதிவு செய்தேன். ஒவ்வொரு இயக்குநர்களுக்கு ஒருபடம் வீதம் தொகுக்கப்பட்டது. அதே இயக்குநரின் மற்ற படங்களையும் தேடுவதற்கு இந்த பட்டியல் உதவலாம்.
01. ஏழை படும் பாடு – ராம்நாத் [1950]
02. பராசக்தி – கிருஷ்ணன்பஞ்சு [1952]
03. ரத்தக்கண்ணீர் – கிருஷ்ணன்பஞ்சு [1954]
04. அந்தநாள் – எஸ்.பாலச்சந்தர் [1954]
05. மளைக்கள்ளன் – ஸ்ரீராமுலு நாயுடு [1954]
06. சிவகெங்கைச்சீமை – கே.சங்கர் [1959]
07. நெஞ்சில் ஓர் ஆலயம் –ஸ்ரீதர் [1962]
08. உன்னைப்போல் ஒருவன் – ஜெயகாந்தன் [1965]
09. பழனி – பீம்சிங் [1965]
10. மறுபிறவி – ராமண்ணா [1973]
11. தாகம் – பாபுந்ந்தன் கோடு [1974]
12. குடிசை – ஜெயபாரதி [1979]
13. பசி – துரை [1979]
14. அவள் அப்படித்தான் – ருத்ரைய்யா [1978]
15. சில நேரங்களில் சில மனிதர்கள் – பீம்சிங் [1978]
16. அக்ரகாரத்தில் கழுதை – ஜான் ஆப்ரஹாம் [1954]
17. 16 வயதினிலே – பாரதிராஜா [1980]
18. உதிரிப்பூக்கள் – மகேந்திரன் [1979]
19. கண் சிவந்தால் மண் சிவக்கும் –ஸ்ரீதர் ராஜன் [1983]
20. ஏழாவது மனிதன் – ஹரிஹரன் [1983]
21. காணிநிலம் – அருண்மொழி [1983]
22. தண்ணீர் தண்ணீர் – கே.பாலச்சந்தர் [1982]
23. ஒரு இந்தியக்கனவு – கோமல் சுவாமிநாதன் [1984]
24. சந்தியா ராகம் – பாலுமகேந்திரா [1990]
25. அவதாரம் – நாசர் [1995]
26. மோகமுள் – ஞானராஜசேகரன் [1995]
27. கருவேலம்பூக்கள் – பூமணி [2000]
28. குட்டி – ஜானகி விஸ்வநாதன் [2001]
29. ஜமீலா [அ] நதிக்கரையிலே – பொன்வண்ணன் [2003]
30. ஒருத்தி – அம்ஷன்குமார் [2003]
31. ஆட்டோகிராப் – சேரன் [2004]
32. காதல் –பாலாஜி சக்திவேல் [2005]
33. ஈ –எஸ்.பி.ஜனநாதன் [2006]
34. பருத்திவீரன் – அமீர் [2007]
35. சுப்ரமணியபுரம் – சசிகுமார் [2008]
36. பூ – சசி [2008]
37. ஆரண்ய காண்டம் – தியாகராஜன் குமாராராஜா [2011]
38. வெண்ணிலா கபடிக்குழு – சுசீந்திரன் [2009]
39. பசங்க – பாண்டிராஜ் [2009]
40. அங்காடித்தெரு – வசந்தபாலன் [2010]
41. ஆடுகளம் – வெற்றிமாறன் [2011]
42. மௌனகுரு – சாந்தகுமார் [2011]
43. மதுபானக்கடை – கமலக்கண்ணன் [2012]
44. அட்டகத்தி – ப.ரஞ்சித் [2012]
45. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – பாலாஜி தரணிதரன் [2012]

2. இந்திய சினிமாவுக்கு 100 வயது (கன்னடப்படங்கள்)


தமிழ் சினிமா பேசத்தொடங்கியதிலிருந்து இன்று வரை 8000 படங்கள் எடுத்திருக்கலாம். இவை ஒன்று கூட சர்வதேச விருதுகள் (கேன்ஸ், பெர்லின், ரோம் ) பெற்றவை அல்ல. கன்னட படங்களில் கமர்சியலாக எடுக்கப்பட்ட படங்கள் பார்க்க சகிக்காது, ஆனால் அவர்கள் இயக்கிய கலைப் படங்கள் 20 தேறும் அவை சர்வதேச அளவில் இருக்கும். சம்ஸ்காரா படம் லோகர்னோ திரைப்பட விழாவில் செப்புச்சிறுத்தை விருதை பெற்றது. பிராமணியத்தின் நோய்க்கூறுகளான சாதி,மத, மூட நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் போல தமிழகத்தில் ஒன்று கூட இல்லை.

நவீன கன்னட சினிமாவை உருவாக்கும் முயற்சியில் நவீன நாடக ஆசிரியர்கள், ஓவியர்கள், நாவலாசிரியர்கள் இனைந்து செய்த முயற்சி அக்காலத்தை பொற்காலமாக்கியது. எவ்வித போட்டி பொறாமைகள் இல்லாமல் அவர்களிடமிருந்த கூட்டுறவு மனப்பான்மையைத்தான் இனி வருகிறவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நவீன கன்னட சினிமாவுக்கு தலித்திசம்,லோகியாவாத சோசலிசம் பெரும் பணி செய்திருக்கிறது. அந்தக்காலகட்டம் உலகம் முழுவதும் இளைஞர்களிடம் ஏற்பட்டிருந்த புரட்சிகரமான உணர்வும், இவர்களது படங்களில் பிரதிபலித்தன. கன்னட தேசிய இன அடையாளங்களும் நவீன நாடக மரபும் நவீன கன்னட சினிமாவை வேறொரு கட்டத்துக்கு நகர்த்தியது. அது ஏன் இங்கே ஏற்படவில்லை என்கிற கேள்விதான் தொக்கி நிற்கிறது. 1970 முதல் 1980 வரை வெளிவந்த தமிழ் படங்களில் நவீன கன்னட சினிமாவின் பாதிப்பை பல இடங்களில் பார்க்கலாம். நிழல் நவீன கன்னட சினிமா நூலை சென்ற ஆண்டு வெளிக்கொண்டு வந்த்து.
———————————————————–
சம்ஸ்காரா – பட்டாபிராமரெட்டி
சோமன துடி – பி.வி.காரந்த்
ஹம்ச கீதே – ஜீ.வி.அய்யர்
கடஷ்ரத்தா – கிரிஷ்காசரவள்ளி
கன்னேஷ்வர ராமா – எம்.எஸ்.சத்யூ
காடு – கிரிஷ்கர்னாட்
அம்சவிருட்சா – கிருஷ்கர்னாட் & பிவி காரந்த்
ஃபனியம்மா – பிரேமா காரந்த்
கிரஹானா – நாகபரணா
பல்லவி- லங்கேஷ்
கனகாம்பர – சிர்சாகர்
சரபஞ்சரா – புட்டண்ண கனகல்
கீஜனகூடு – டி.எஸ் ரங்கா
ரிஷ்யசிருங்கா – வி.ஆர்.கே பிரசாத்
காகனக்கொட்டெ – சி.ஆர். சர்மா
காடிகே ஹோடவாரு – வேகமல் ஜெகநாத்
ஆக்ஸிடெண்ட் – சங்கர் நாக்
அதிதி – பி.சேஷாத்ரி

3. இந்திய சினிமாவுக்கு நூறு வயசு : (மலையாளப்படங்கள்)

மலயாள சினிமாவை தமிழர்கள் தான் தோற்று வைத்தார்கள்; ஆனால் படம் எடுக்கும் முறையிலும் திரை மொழியை புரிந்து கொண்ட முறையிலும் தமிழர்களை விட முன்னே சென்று விட்டனர். மண்வாசனை, யதர்த்த நடிப்பு, முதலியவை மூலம் உலக சினிமாவை நெருங்கிவிட்டனர். மற்ற மாநில மக்களுக்கு ஷகிலா படங்களை எடுத்தாலும் கேரளத்தில் இந்த மாதிரி படங்கள் ஒடுவதில்லை. அவர்களுக்கு கலை படமும் எடுக்க தெரியும், கமர்ஷியல் படமும் எடுக்க தெரியும். மலையாளிகளிடம் கற்று கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.

பார்க்க வேண்டிய மலையாள படங்கள்:

1. ஓலவும் தீரவும் – பி.என்.மேனன் 1969
2. நிர்மால்யம் –எம்.டி.வாசுதேவன்நாயர் 1973
3. செம்மீன் – ராமுகாரியாத் 1966
4. இரைகள் – கே.ஜி.ஜார்ஜ்
5. எலிப்பத்தாயம் – அடூர்கோபாலகிருஷ்ணன்
6. சிதம்பரம் – அரவிந்தன்
7. அம்ம அறியான் – ஜான் ஆப்ரகாம்
8. பஞ்சாக்னி – ஹரிஹரன்
9. ஆள் கூட்டத்தில் தனியே – ஐ.வி.சசி
10. வரவேற்பு – சத்யன் அந்திக்காடு
11. சுகிர்தம்- ஹரிகுமார்
12. ஒரு மின்னா முனுங்கிண்ட நுருங்கு வட்டம் – பரதன்
13. பிறவி- ஷாஜி கருண்
14. அதிதி- கே.பி.குமாரன்
15. சதயம் – சிபிமலயில்
16. ஓப்போள் – கே.எஸ்.சேதுமாதவன்
17. வடக்கு நோக்கி எந்திரம் – சீனிவாசன்
18. புருஷார்த்தம் – கே.ஆர்.மோகனன்
19. ஒரு தூவல் பட்சிகள் – ரவீந்திரன்
20. உப்பு – பவித்திரன்
21. பெருவழியம்பலம் – பத்மராஜன்
22. பொந்தன்மாடா-டி.வி.சந்திரன்
23. கபனி நதி சுவன்னப்போல் – பி.ஏ.பக்கர்
24. விடைபறையுமுன்பே – மோகன்
25. பெருந்தச்சன் – அஜயன்

4. இந்திய சினிமாவுக்கு வயது 100 (அஸ்ஸாமி, மேகாலயா, மணிப்பூர் )

சைக்யா, ஜானுபருவா, கெளதம் போரா போன்ற இயக்குனர்கள் ஈரானிய இயக்குனர்களைவிட சிறந்தவர்கள் . இவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் பிறந்து விட்டதினாலேயே நமது இந்தி பாரம்பரியம் இவர்களை ஒதுக்கி வைத்து விட்டது. இவர்களது படங்களைப் பார்த்தவர்கள் ஒவ்வொரு திரைப்பட விழாக்களிலும் புகழ்ந்ததை கேட்டிருக்கிறேன். ஜானுபருவாவின் படங்களைப் பார்க்க வேண்டாம் சில ப்ரேம்களே கதை சொல்லும்.

வடகிழக்கு மாநில சினிமா

சந்தியராக் – டாக்டர் பாபேந்திரநாத் சைக்யா (1977) அசாமி
ஹலோடியா சோராயே – போவோதான் காயே -ஜானுபருவா
வோசோபிபோ – கெளதம் போரா –(1990)
மீமான்சா – சஞ்சீவ் ஹசாரிக்கா (1994)
பிரிஸ்டி – குயுத்தி பருவா
கங்கா சிலாநிர் பாஹி – பதும் பருவா
உத்தரான் – மனோரஞ்சன் சுர் (1994)
ததாபியோ நதி – ஹெமந்த தாஸ்
ருத்ரபாட் – மிருதுல் குப்தா
ஷா நெள – அரிபாம் ஷ்யாம் சர்மா, மணிப்பூரி
ஆலாயாரோன் – ஜங்க்டாவோ போடோஷா, போடோ மொழி
இமாஹி நிங்தெம் – மணிப்பூரி
மாணிக் ரெய்தாங் – அர்தேந்து பட்டாச்சார்யா, மேகாலயா

5. நவீன இந்திய சினிமா (வங்காளம்)

இந்திய மறுமலர்ச்சியில் வங்கத்திற்கு எப்போதுமே முதலிடம் உண்டு. சினிமா,(சத்யஜித்ரே) நாடகம் (உத்பெல்தத்) ஓவியம் (ஜெமினிராய்) இசை (ரவிசங்கர்)இலக்கியம்- கவிதை(ரவீந்திரநாத் தாகூர்) நாவல் (பக்கிங் சந்திரசட்டர்ஜி, சரத்சந்திரர்) சினிமா இயக்கம் (சித்தானந்த தாஸ் குப்தா) இது போல எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும் வங்காலிகள் முன்னோடும் பிள்ளைகளாக இருந்திருக்கிறார்கள். சினிமாவில் அவர்களுடைய சாதனை என்பது உலகசினிமாவிற்கு பல்வேறுவிதங்களில் நெருங்கிபோய் இருக்கிறது. இந்திய நவீன சினிமாவிற்கு அவர்களுடைய நன்கொடை பெரியதாகத் தான் இருந்திருக்கிறது.

வங்காளப்படங்கள்

பதேர்பாஞ்சாலி – சத்யஜித்ரே
கல்கத்தா 71 – மிருனாள் சென்
மேஹ தக தாரா – ரித்விக் குமார் கட்டாக்
சோக் – உத்பலேந்து சக்ரவர்த்தி
36 செளரங்கி லேன் – அபர்ணா சென்
காபூலிவாலா – தாபன் சின்ஹா
அந்திகாலி – புத்த தாஸ் தேவ குப்தா
தஹால் – கெளதம் கோஷ்
உனிசே ஏப்ரல் – ரிதுபர்ண கோஷ்
சாரா ஆகாஷ் – பாசு சட்டர்ஜி
சின்னமுள் – நிமாய் கோஷ்
தாதா தாகூர் – சுதிர் முகர்ஜி
சாகர் சங்கமே – தேவகி குமார் போஸ்
அனுராதா – ரிஷிகேஷ் முகர்ஜி
பஹானி நிவேதிதா – பிஜய்பாசு
ஹேமந்தர் பாஹி – உர்மி சக்ரவர்த்தி
சோத் – பிப்ளப் ராய் செளத்ரி
தாதர் கிர்தி – தருண் மஜீம்தர்
கோனி –சரோஜ் டே
செளதா – நப்யெந்து சட்டர்ஜி
கால் அபிரிதி – அபிதாப் சக்ரவர்த்தி
ஏக்தி நதிர்நாம் – அனுப்சிங்
மகுல்பாதிர் செராங் – சேகர்தாஸ்

6.இந்திய சினிமாவுக்கு நூறூ வயசு – வடமேற்கு மாநிலப்படங்கள் (மராத்தி, குஜராத்தி)

குஜராத்தி, மராத்தியில் மிகச்சிறந்த படங்கள் நவீன நாடகக்குழுக்களாலேயே உருவானது. விஜய் டெண்டுல்கர், கேத்தன் மேத்தா, ஜாபர் பட்டேல், கோவிந்த் நிக்லானி, போன்றோரின் பங்களிப்பை பிற மொழியினரும் பயன்படுத்திக்கொண்டனர்.

பிஞ்ரா – மராட்டி 1951
சாம்னா – ஜாபர் படேல் , மராட்டி 1975
உம்பரத்தா – ஜாபர்படேல் 1981
கன்ஷிராம் கொத்வால் – யுக்த் குழு 1976
சாந்ததா, கோர்ட் சாலு ஆஹே – கோவிந்த் நிஹ்லானி
ஷ்யாமாச்சி ஆயி – மராட்டி 1974
ஜெய்த்ரே ஜெய்த் – தேவகி நந்தன் 1977
கோபாலா – ராஜ்தத் 1979
சர்வ சக்ஷி – ராம்தாஸ் புட்டனே 1979
22 ஜீன் 1892 – நாச்சி ஜெகத் மற்றும் பட்டவர்த்தன் 1980
அக்ரிமேத் – அமோல் பாலேகர் 1982
ஸ்மிரிதி சித்தே – விஜய் மேத்தா 1984
ஆயி – மகேஷ் மஞ்ச்ரேக்கர் 1995
பங்கர்வாடி – அமோல் பாலேகர் 1997
பிந்தாஸத் – சந்திரகாந்குல்கர்னி
டோம்பிலி பாஸ்ட் – ரிஷிகாந்த் காமத் 2005
டிங்னியா – மகேஷ் ஹடாவலே 2008
கங்கு – குஜராத்தி 1969
ஜனம் தீப் – குஜராத்தி
பவானிபவாய் – கேத்தன் மேத்தா 1980