Monthly Archives: August 2013

nizhal 31 govt vetinary college

31-ஆவது குறும்படப் பயிற்சிப் பட்டறை – வேப்பேரி, சென்னை

பிரின்ஸ் என்னாரஸ் பெரியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி பேராசிரியர் திரு. மதியழகனின் அறிமுகம் கிடைத்தது. சென்னையிலுள்ள கால்நடைக் கல்லூரியில் தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை, கால்நடைத் துறை உயர் அதிகாரிகளுக்கான குறும்படப் பயிற்சிப் பட்டறை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை 10 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் நிழல் திருநாவுக்கரசு, சுரேஷ்வரன், பாலு மணிவண்ணன், ஜீவ மணிகண்டன், தாஸ், சைமன், பேரா. ரவிராஜ், பொன்.சுதா முதலியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். துறை சார்ந்து 5 படங்கள் எடுக்கப்பட்டன. இனி இதுபோலப் பல்வேறு துறை சார்ந்து குறும்படப் பயிற்சிப் பட்டறைகள் நடக்க சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன.

[flagallery gid=33 name=”31_Govt_vetinary”]

Nizhal 30 Alpha college workshop

” 30 வது குறும்பட பயிற்சி பட்டறை ”

நிழல் –பதியம் இணைந்து தமிழகம் முளுவதுஅம் 30 மாவட்டங்களில் குறும்பட பயிற்சி பட்டறையை நடத்தி இதுவரை 4,500 பேருக்கு பயிற்சி அளித்துள்ளது.இந்த 30-வது பயிற்சி சென்னையை அடுத்துள்ள போரூரில் அமைந்துள்ள ஆல்ஃபா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் , இளங்கலை காட்சி தொடர்பியல் துறையில் ஜூலை 22 முதல் 27 வரை வெற்றிகரமாக நடந்து முடிந்தது .

முதல் நாள் கூத்துப்பட்டறை வகுப்பில் நிழல் திருநாவுக்கரசு குறும்பட , ஆவணப்பட வறலாறு , அதன் வகைகள் இலக்கணம் எடுக்கும் முறை பற்றி விளக்கி குறும்பட ஆவணப்படங்கலை திரையிட்டு புரியவைத்தார்.
இரண்டாம் நாள் கூத்துப்பட்டறை சுரேஸ்வரன் நடிப்பு வகுப்பினை விளையாட்டில் மூலம் தொடங்கி நடிப்பின் பரிணாமங்களை வெளிக்கொணர்ந்தார்.மூன்றாம் நாள் இயக்குனர் பாலு மணிவண்ணன் கதை என்றால் என்ன , திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்று கற்பித்து மாணவர்களையும் திரைக்கதை எழுத வைத்தார்.

நான்காம் நாள் காலை 8.45க்கே ஒப்பனை வகுப்பை தொடங்கி பொதுவான ஒப்பனை முறைகளை கூறி ஒரு மாடலை செய்ய வைத்தார் . பின்பு ஒப்பனையின் பல்வேறு வகைகளையும் விளக்கும் விதமாக பல மாண்வர்களுக்கு ஒரே நேரத்தில் செய்து காண்பித்துமாணவர்களையும் செய்ய வைத்தார்.

ஐந்தாம் நாள் காலை 8 மணியிலிருந்து 3 மணி வரை மாணவர்கள் 6 குளுக்களாக பிரிந்து ஆறு படங்களை எடுத்தனர்.4 மணி முதல் எடிட்டர் ஜீவா ஒவ்வொரு குளுவினரையும் அருகில் வைத்துக்கொண்டு இரவு முளுவதும் படத்தொகுப்பு செய்து முடித்தார்.

ஆறாம் நாள் காலை மாணவர்கள் எடுத்த படங்கள் திரையிடப்பட்டு கலந்துகொண்ட எல்லா மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்களுடன் பட்டறை சிறப்பாக நடந்து முடிந்தது.

[flagallery gid=32 name=”30_Alpha_college”].