28_Kovai_Nizhal_Shortfilm_Workshop

நிழல் 28 குறும்ப்பட பயிற்சிப்பட்டறை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது
நாள் 23 – 28 பிப்பரவரி 2013 இடம் : கோவை, திருநாவுக்கரசு 9444484868
Nizhal 28th shortfilm workshop sucessfully completed
Date : 23 – 28 February 2013, Place: Coimbatore, Thirunavukkarasu 9444484868

[flagallery gid=26 name=”28_Chettipalayam”].

[flagallery gid=25 name=”28_kovai_Chettipalayam”].

nizhal workshop shortfilms taken by nizhal students in 28th nizhal pathiyam shortfilm workshop… these are training shortfilms..

நிழல்-பதியம் இணைந்து நடத்திய 28வது குறும்பட பயிற்சி பட்டறை கோயம்புத்தூர் செட்டிப்பாளையம் சி.டி.பவுண்டேசனில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 66 மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டனர். அதில் பெங்களூரை சேர்ந்த தமிழர் ஒருவரும் தமிழீழ மண்ணிலிருந்து தமிழன் ஒருவரும் கலந்து கொண்டது இந்த பட்டறையின் பல சிறப்புகளில் இதுவும் ஒன்று.
கோவையிலிருந்து தான் குறும்பட பயிற்சி பட்டறை துவங்கியது. தமிழகத்தின் 27 மாவட்டங்களில் கடந்த பத்தாண்டுகள் சுற்றிவிட்டு மீண்டும் கோவையிலிருந்தே தனது பயணத்தை துவங்கியிருக்கிறது.
பட்டறை நடந்த இடம் சி.டி.பவுண்டேசன். இது ஒரு ஜைனருடைய தாஜ்மஹால் என்று சொல்லலாம். மறைந்த தன் மனைவிக்காக எழுப்பிய நினைவு மண்டபம். நில மட்டத்திலிருந்து 15 அடி கீழே இரண்டு சதுரமான மிகப்பெரிய பிரமீடு வடிவ கோபுரங்களை உடையது. இரண்டு மண்டபத்திலிருந்து வெளிவந்து மேலேறினால் இத்தாலிய கொலோசியத்தின் அரை வட்டம் போன்ற கேலரியும் நாடக மேடையும் பார்ப்பவர் மனதை பரவசப்படுத்தும். அரங்கத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களும் செய்குளங்களும் ஜென்-பெளத்திச பாணியில் உருவாக்கப்பட்டிருந்தது. வாயில்களும் மாடங்களும் பின்நவீனத்துவ பாணியில் செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தை கோவை வாசிகளே பார்த்ததில்லை என்று பலரும் தெரிவித்தனர்.
வாசன் அவர்கள் வரவேற்புரையை ஆற்ற முருகவேள் தலைமை ஏற்க பாமரனும் செளந்தரும் வாழ்த்த பட்டறை இனிதே துவங்கியது. குறும்படம் ஆவணப்படம் பற்றி திருநாவுக்கரசும், நடிப்பு பயிற்சியை சுரேஷ்வரனும் தம்பிச்சோழனும், ஒப்பனை பற்றி ரகுமானும் கேமரா கையாளுதல் பற்றி பன்.இறையும்,திரைக்கதை எழுதுவது பற்றி இயக்குனர் பாலுமணிவண்ணனும், படத்தொகுப்பு பயிற்சியை படத்தொகுப்பாளர்கள் அருண் துரைராஜ் மற்றும் நிழல் படத்தொகுப்பு நிலையத்தின் பயிற்றுனர் ஜீவா மணிகண்டன் அவர்களும் பயிற்சி அளித்தனர். திரைப்பட திறனாய்வை ஆனந்த் மற்றும் கனல் மைந்தன் ஆகியோர் செய்தனர்.
மாணவர்களின் அனுபவ பகிர்விற்குப்பிறகு ”மதுபானக்கடை” இயக்குனர் கமலக்கண்ணன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். குழு புகைப்படம் எடுக்கப்படம் எடுக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் ’நாளி’ லட்சுமணன் நன்றியுரையாற்ற வெற்றிகரமாக பயிற்சி பட்டறை நிறைவுற்றது.

அனுபவ பகிர்வு….

”நிழலில்” இளைப்பாறிய சில நாட்கள்
– எஸ். செளந்தரராஜன், கோவை.
திரைப்படங்களின் மீது தணியாத தாகம் எனக்கு. பால்யம் முதல் இன்றுவரை அதன் ஆச்சர்யங்களிலிருந்து என்னால் மீளவே முடியாததே அதன் வலிமைக்கு சாட்சி. நான் மட்டுமல்ல என்னைப் போலவேதான் நீங்களும் என்பதை நான் நன்கறிவேன். எல்லாக் கலைகளுக்கும் இந்த மன ஈர்ப்பு சக்தி இருப்பினும்…. திரைப்படக்கலைக்கு இந்த ஈர்ப்பு சக்தியும் வலிமையும் மிக அழுத்தமாகவும் அதிகமாகவும் உண்டு என்பதை உலகறியும்.
திரைப்படத்தை முறையாக பயிலவேண்டும் என்ற ஆவல் எனக்கு வெகு காலமாக உண்டு.
காலம் கடந்தாலும்…அந்த நெருப்பு எனக்குள் கனன்று கொண்டே இருந்தது. காலம்தான் யாரிடம் எதனைக் கொண்டுபோய் எப்போது சேர்ப்பது என்பதைத் தீர்மானிக்கிறது.
சூழலும் வாய்ப்பும் வாய்க்காமலேயே 44 வயதைக் கடந்துவிட்ட எனக்கு முகநூல் வழியாக வந்ததொரு வாய்ப்பு…..
“ நிழல்-பதியம்” 28-ஆவது குறும்படப் பயிற்சிப் பட்டறை”
கோவையில் மிக ரம்யமான தனிமைச் சூழலில் அமைதியும் அழகும் மெளனமொழி பேசும் C.D.FOUNDATION-ல் நடந்தது.
2013 பிப்ரவரி 23 முதல் 28 வரை…6 நாட்களும் என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்களைத் தந்த நாட்கள்.
100 மணி நேரத்தில் சினிமா பற்றிய முழு தகவல்களையும் பயிற்சியையும் தந்துவிட முடியுமா என சந்தேகத்துடனும் … இது ”ரியல்” அல்ல ”ரீல்” என்ற அவநம்பிக்கையுடனும் சென்ற எனக்கு, என் அவநம்பிக்கையைப் பொய்யாக்கி, அது சாத்தியமே என்பதை மெய்ப்பித்துக் காட்டியது திரு. ’நிழல்” திருநாவுக்கரசு அவர்களின் பாடத்திட்டமும்,பயிற்சி முறையும். பயிற்சியாளர்களும்…. இது ஒரு ஆச்சர்யம்தான்.
.
ஒப்பனைமுதல்….. படத்தொகுப்பு வரை……. ஒர் குறும்படத்திற்கு மட்டுமல்ல ஒரு திரைப்படத்திற்கே தேவையான அனைத்தையும் ஒருங்கினைந்த பாடத்திட்டமாக அமைத்திருந்த விதம் அருமை. பயனுள்ளது. ஒவ்வொன்றும் பயிற்சியுடன் இணைந்திருந்ததால்…. பழகிப் பயின்றவிதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானே ஒரு மாணவனாய் மாறிப்போனேன் ஒரு குழந்தையைப் போல.
நிகழ்ச்சியை முதல்நாள் தொடங்கி வைத்த ”பதியம்” பாரதிவாசன் முதல், நிகழ்ச்சியை நிறைவு நாள் சிறப்புரை செய்து சான்றிதழ் வழங்கிய “மதுபானக்கடை” இயக்குனர் கமலக்கண்ணன் வரை….. வழங்கிய உரைகளும்…அனுபவ அறிவும் ….பகிர்ந்து கொண்ட செய்திகளும்… நவீன சினிமா குறித்த புரிதலை தெளிவு படுத்தின.
சினிமா தொழில் நுட்பத்தை பயில்வதையும் தாண்டி , சினிமாவை எப்படி அணுகுவது என்பதை, ரசனையை, திரைமொழியைப் புரிந்து கொள்ளும் விதத்தை, நவீன சினிமா உத்திகள் ஆகியவற்றை நன்கு கற்க முடிந்தது சிறப்பாய் இருந்தது.
வாழ்த்துரை வழங்கிய திரு.பாமரன், எரியும் பனிக்காடு (Red Tea) நாவல் மொழிபெயர்ப்பாளர் திரு.முருகவேள், திரு.செளந்தர் ஆகியோரின் உரை அர்த்த செறிவு மிக்கதாய் இருந்தது.
நடிப்பு பயிற்சி தந்து நடிப்பையே விளையாட்டாய் பயிற்றுவித்த கூத்துப்பட்டறை திரு.சுரேஷ்வரனையும், மதியம்…கருவாகி ..உருவாகி… குழந்தையாகி ஆணாக இருந்தாலும் எனக்கும் ஒரு பிரசவ அனுபவத்தைதயும் பட்டாம்பூச்சியாய் எனை உருமாற்றி உணரச்செய்த திரு.தம்பிசோழனையும் என்னால் மறக்கவே முடியாது. நானே நடித்தது எனக்கு புது அனுபவம்தான்.
வினோதினியின் தந்தையாய் நான் உருமாறியது எனக்கு ஆச்சர்யம்தான். நமக்குள்ள ஆற்றலை நம்மை அறியாமலே வெளிக்கொணர்ந்த விதம் அழகு.
ஒப்பனை பயிற்சி தந்த சாதனை சிகரம் திரு.ரகுமான் ஒரு தோழமை நெஞ்சம். Special effects, சினிமா மேக்கப், ஒப்பனை சாதனங்களின் விலைமுதல் விற்கும் இடம், வித்தை வரை விளக்கிய விதம் அருமை. நான் என் கைப்பட இன்னொருவருக்கு ஒப்பனை செய்தது வித்தியாசமான அனுபவ்ம்தான்.
கேமரா, கோணம், வெளிச்சம்…. ஆகியவற்றை மிக அழகாக விளக்கிய திரு. பன்.இறை அவர்கள் நினைவுகூறத்தக்கவர்.
Forms of Photography, Rim Light Photography, Rule of Third ஆகியன பற்றி மிக அழகாகவும், செய்முறை விளக்கமும் தந்தது நல்ல அனுபவம்.
இலக்கியத்தில் நல்ல பரிச்சயமும் படைப்பாற்றலும் உள்ள நான்.. இதுவரை பலமுறை திரைக்கதை எழுத முயற்சி செய்து தோல்வியுற்றிருக்கிறேன். பல முறை பாதியிலேயே மனம் சோர்ந்து முயற்சியைக் கைவிட்டிருக்கிறேன். ஆனால் இயக்குனர் திரு. பாலுமணிவண்ணன் அவர்களின் ஊக்கம் தரும் உரையாலும், திரைக்கதை உத்தி பற்றி பாடம் நடத்திய விதத்தாலும், ஒரு திரைக்கதை ஆசிரியன் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழவேண்டும் என்ற நேர்மையினாலும் நெஞ்சில் நிற்கிறார். திரைக்கதைப் பயிற்சி மனதில் நிற்கிறது.
அன்று மதியம் நடைபெற்ற மின்சார வெட்டை மையமாக வைத்து நடத்தப்பட்ட 2 மணி நேர திரைக்கதை தேர்வு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பயன்மிக்கதாயிருந்தது. ஆச்சர்யப்படத் தக்க வகையில் நான் ஒரு முழு திரைக்கதை எழுதி முடித்திருந்தேன்.
படத்தொகுப்பு பற்றி திரு. அருண்துரைராஜ் மிக எளிமையான முறையில் கேள்வி பதில் முறையில் விளக்கினார். அவரின் அனுபவத்தையும் சேர்த்து பயிற்சி பெற வந்தவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாகவும் அமைதியாகவும் பதில் தந்து நன்கு விளக்கினார்.
மாலையில் திரு. ஜீவா மணிகண்டன் (மணிஜீவா) அவர்களின் படத்தொகுப்பு வகுப்பு மிக விரிவாகவும் வெகு அற்புதமாகவும் இருந்தது. படத்தொகுப்பின் வகைகள், முறைகள், Basic Rules of Editing, Editing softwares, Types of cuts, Optical effects ஆகியவற்றினை மிக அழுத்தமாக விளக்கினார். இதற்கிடையில் நாங்கள் ஒரு குழுவாக இணைந்து ஒரு குறும்படம் தயாரித்திருந்தோம். இவரே எங்கள் குழு எடுத்த குறும்படத்தினை practical-ஆக Editing செய்து விளக்கினார்.
ஒவ்வொரு நாளும் திரு.”நிழல்” திருநாவுக்கரசு அவர்கள் அன்றைய பாடம் பற்றிய வரலாற்றையும், இலக்கணத்தையும், அதன் பின்னனி பற்றியும், நவீன சினிமா குறித்தும் தினமும் வகுப்பெடுத்தார். அது மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அவரே குறும்படம், அதன் வகைகள் பற்றியும், ஆங்கிலப் படங்கள் திரையிட்டு காட்டியும் விளக்கியும் வந்தார். இது எங்கள் எல்லோருக்குமே ஒரு புதிய பார்வையைத் தந்தது. அதே நாளில் ”கோணங்கள்” திரு. ஆனந்த் அவர்களின் உரையும் நவீன சினிமா அறிமுகமும் நாம் வளர வேண்டிய பாதையையும் பயணப்பட வேண்டிய இலக்கையும் தெளிவுபடுத்தியது.
பட்டறையின் கடைசி நாளன்று… திரு.கனல் மைந்தன் அவர்களின் உரை மிக ஆழமாக இருந்தது. வரலாற்றுப் பார்வையை முன் வைத்தது.
”மதுபானக்கடை” இயக்குனர் திரு. கமலக்கண்ணன் அவர்களின் உரையும், மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த விதமும், தனது பட அனுபவம் குறித்த பகிர்வுகளும் அருமையாகவும் அழகாகவும் பயனோடும் இருந்தன.
பின்னர், மாணவர்களின் அனுபவப் பகிர்வு நடைபெற்ற போது ஒவ்வொருவரும் உணர்ச்சிபொங்கவும், உள்ளத்தில் உள்ளது அனைத்தையும் கொட்டிவிடத் தவித்த தவிப்பும் அற்புதமாக வெளிப்பட்டது.
அதன் பின்னர்…. ”மதுபானக்கடை” இயக்குனர் திரு. கமலக்கண்ணன் சான்றிதழ் வழங்கினார். பதியம் திரு. பாரதிவாசன், திரு. ”நிழல்” திருநாவுக்கரசு அவர்களும் இணைந்து வழங்கினர்.
திரு. ”நாளி”லட்சுமணன் நன்றி கூற பயிற்சி அரங்கம் இனிதே நிறைவுற்றது.
தனித்தனியே வந்தோம்… வயது வித்தியாசம் இன்றி நண்பர்களோனோம்… ஒரே இடத்தில் தங்கி, உண்டு, உறங்கி… ஆறு நாட்களில் ஐக்கியமானோம் ஒரு குடும்பமாய்.
இறுதி நாளன்று விடைபெற்று பிரிந்தபோது…. ஒவ்வொருவரின் கண்களின் ஓரங்களிலும் கண்ணீர் துளி. ”மச்சான் நாம சாதிப்போம்டா என்ற சூளுரை” என்று கனத்த மனதுடன் பிரிந்தோம்.
”நிழல்”-பதியம் 28 ஆவது குறும்படப் பயிற்சிப் பட்டறையில் நானும் மாணவனாய் கற்றது என் வாழ்வில் மறக்க இயலாத அனுபவம்..
மாறா அன்புடனும் நன்றியுடனும் எஸ்.செளந்தரராஜன்.
கோவை-5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *