Ilakiya Kalam Oct2011

Ilakiya Kalam Oct2011

காஞ்சிபுரத்தில் ஒரு நாள் முழுவதும் குறும்பட திரையிடல் – நாள் 23 அக்டோபர் 2011 ஞாயிற்றுக்கிழமை.
இடம்: பூமாலை வளாகம்., தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்
விருந்தினர்கள்: நிழல் பா. திருநாவுக்கரசு. பேராசிரியர் அமுதா. தொடர்புக்கு எட்பெர்த் – 9442568566

One Full Day Shortfilm Screening in Kanchipuram on 23 – Oct’2011, Sunday…
Place: Poomalai Valagam, Opp. Head Postoffice, Kanchipuram., Chief Guest., Nizhal P. Thirunavukkarasu, Prof. Amutha.

[flagallery gid=20 name=”Ilakiya_Kalam_Oct2011″].

காஞ்சிபுரத்தில் இலக்கியகளம் என்னும் அமைப்பு கடந்த 11 மாதங்களாக, மாதம் ஒரு முரை பல தலைப்புகளில், பல கூட்டங்கள் நடத்திவருகின்றது. இம்முறை “குறும்படங்கள்” என்ற தலைபை எடுதுதுக்கொண்டதால், நிழல் திருநாவுக்கரசுவும், பேராசிரியர். அமுதா மற்றும் இணை இயக்குனர் பகலவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைகபட்டனர்.

பகலவன், தற்பொழுது வெளிவந்துள்ள சிறந்த படம் மற்றும் குறும்படங்கள் பற்றி பேசினார்.
பேராசிரியர். அமுதா தனது குறும்பட அனுபவங்கள் பற்றி பேசினார். குறும்பட துறையில் பெண்கள் வர வேண்டும், இதனால் சமுகத்தில் பெண்களுக்கு ஏற்படும் தீமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம் என்றார். அத்துடன், வாளை விட கூரியது பேனா முனை, என்ற பழைய வாக்கியத்தை எடுத்து, ஒரு கேமரா ஆயிரம் பேனாகளுக்கு சமம் என்றார். பெண்கள் தங்கள் கையில் கேமரா எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

நிழல் திருநாவுக்கரசு, குறும்படம் பற்றிய வரலாறு, திரைப்பட வரலாறு, அவை எப்படி தமிழ் நாட்டுக்கு வந்தது என்பதை பற்றி கூறினார். இன்றைய திரைப்பட நிலையையும், நல்ல படத்தை எவ்வாறு வித்தியாச படுத்தி பார்ப்பது என்று கூறினார். மேலும் தமிழர்கள் திரைப்பட துறையில் செய்த பல சாதனைகளை நாம் அங்கிகாரம் செய்யாததையும், தொடக்கால படங்களை நாம் சேமித்து பதபடுத்தி வைக்காததையும் சுட்டி காட்டினார்.

பிறகு பல உலக மற்றும் தமிழ் குறும்படங்கள் திரையிடப்பட்டன. பின்பு அதை பற்றி விமர்சனங்களை பார்வையாளர்கள் நிழல் திருநாவுக்கரசுவிடம் பகிர்ந்து கொண்டனர்.
====== நன்றி =======

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *