Other Magazines Feedback

Feedback from other magazines
மற்ற ஊடகங்களின் பார்வையில் நிழல்…

கிராமங்களில் இருந்து பெருநகர்களை நோக்கி : நிழல் திருநாவுக்கரசு
Source: http://yamunarajendran.com/?p=2285

நிழல் அமைப்பு 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் கிராமங்களுக்கு சென்று உலகப்படங்கள், குறும்பட, ஆவண படங்களை திரையிடத்து, நல்ல படங்கள் எது என்பதை பார்வையாளர்களே உணரும்படி செய்ய வேண்டும் என்பதே என்நோக்கம் அதற்க்கான படங்களை திருவாளர்கள் யமுனா ராஜேந்திரன், பேங்க் பாலு, சித்தார்த், ராமானுஜம், அசோக் போன்றோர் கொடுத்து வந்தனர் .1995 முதல் இன்று வரை நகரம் மற்றும் கிராமங்களில் 4096 திரை இடல்களை நடத்தி இருக்கிறோம் .இதன் மூலம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் 18 திரைப்பட சங்கங்களை தொடங்கினோம்.

இவர்களை இணைப்பதற்கு என்றே ‘நிழல்’ இதழை 2001 ஜூலையில் தொடங்கினேன் .நிழல் உலகம் முழுவதும் சென்றது. காட்சி ஊடக துறைக்கு இப்படியான இதழ் தேவை என்பதை அனைவரும் உணர்ந்து இருந்ததால் வரவேற்ப்பு என்பது பலமாக இருந்தது. மேலும் நமது மக்களிடம் ஆங்கிலம் மூலம் தான் சினிமாவை படிக்க முடியும் என்பதை மாற்றி எப்படிப்பட்ட அறிவியல் பூர்வமான ஊடக செய்தியாக இருந்தாலும் அதை தமிழில் தரமுடியும் என்பதை நிழல்தான் முதன் முதலில் செயலில் காட்டியது. கேமரா, படத்தொகுப்பு, ஒளி அமைப்பு, ஒப்பனை, திரைக்கதை, நடிப்பு போன்ற துறைசார் கட்டுரைகளையும் புத்தகங்களையும் நிழல் வெளிஇட்டது. நிழல் வெளி வந்த பின்னரே பல கல்லூரிகளில் பாடங்களும் சொல்லித் தரப்பட்டன. தேசிய விருது பெற்ற கேமராமானுக்கு பாராட்டு விழா என்று ஊத்தங்கரைக்கு அழைக்கப்பட்டேன். அவர் செய்த படத்தை தொழில் நுட்பரீதியில் விளக்கி பேசினேன், கேமராமான் பேசும் போது நிழல் குழுவினர் திருவண்ணமலையில் cpl அலுவலகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் வந்து திரை இட்டனர், அதை பார்த்தே எனக்கு திரைப்படம் மீது ஆசை வந்தது என்றார். இது போல எவ்வளவோ. ”சொல்லப்படாத சினிமா”தான் இந்திய அளவில் வெளி வந்த முதல் ஆவணப்பட மற்றும் குறும் படத்திற்க்கான முதல் புத்தகம். இந்த புத்தகத்திற்கு மட்டும் 35 மதிப்புரைகள் வெளிவந்தன. இது வெறும் புத்தகமாக மட்டும் இல்லாமல் ஒரு செயலியாகவும் மாறியது. இதை வைத்துதான் தமிழகம் முழுவதும் அலைந்து 38 பட்டறைகள் நடத்தி 4000 பேரை உருவாக்கி இருக்கிறேன் .நமது வேலை மீனைக் கொடுப்பதல்ல, மீன் பிடிக்க கற்று கொடுப்பதுதான் என்பதை உணர்த்துதான் இதை செய்தேன். பட்டறை மூலம் இயக்குனர்கள், கேமராமேன்கள், படத்தொகுப்பாளர்கள், நடிகர்கள், cg animattrs, பத்திரிக்கையாளர்கள், ஸ்டில் போட்டோ grapers முதலியோர் உருவாகி உள்ளனர் .தமிழக அளவில் 15 ஆண்டுதொடர்ச்சியாக வெளிவந்த வணிகம் சாராத திரை இதழ் ‘நிழல்’ மட்டுமே .

நிழல் 15 மற்றும் பட்டறை 10ஆண்டுகள் நடத்தி நிறைய அனுபவம் கிடைத்தது .அதன் மூலம் ஸ்டீரியோ stype முறையை ஒழித்து புத்தம் புது முறைகள் புகுத்தப்பட்டு எங்களை நாங்களே புதுப்ப்பிப்பதுடன் பாடத்திட்டம் ,மற்றும் நடைமுறைகளிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது .பட்டறை ஒரு நாளில் தொடங்கி 3 நாட்கள் ஆகி தற்போது 7 நாட்கள் நடந்து வருகிறது. பெர்ரி கற்பித்த முறையில் தான் நடைமுறை உள்ளது .பெர்ரி பாணியில் திரைப்பட பள்ளி உருவாக்க வேண்டும் என்பதே எதிர்கால இலக்கு.

20 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது .மன்னார்குடி அடுத்த சவளக்காரனில் பை சைக்கிள் படம் திரை இட்டோம். நெல் அறுத்த விவசாயக்கூலிகள் வந்து பார்த்தனர். கருக் அருவாளில் அப்படியே வியர்வையை வழித்து போட்டு விட்டு உட்கார்ந்தனர் .அப்போதெல்லாம் சப் டைட்டிலே கிடையாது .அதனால் கதைச்சுருக்கத்தை முன்னரே சொல்லி விடுவோம். படம் முடிந்த பிறகு அது பற்றி கேட்போம் .அப்போது ஒரு சிறுவன் சொன்னான் : அண்ணே இந்தப்படம் ஸ்டுடியோவில் எடுக்கப்படவில்லை என்றான் ,இந்த பதில் ஹெக்கேடு அனுபவத்திற்கு ஈடானது என்பது என் அபிப்ராயம். இது போல பல் வேறு ஊர்களில் கெமர கோணம் ,கதையின் போக்கு பற்றி விபரமாக பல கிராம இளைஞகர்கள் என்னுடன் பேசினார்கள். மக்கள் எப்பவுமே சரியானவற்றை கொடுக்கும் போது ஏற்க மறுப்பதில்லை என்பதை உணர்வு பூர்வமாக அன்று அறிந்து கொண்டேன். இது போல அரக்கோணத்தை அடுத்த அம்மையற்குப்பத்தில் படம் திரையிட்ட போது உள்ளூர் காலிகள் ரஜினி படம் போடும்படி கலாட்ட செய்தனர். நான் பேசாமல் இருந்தேன். உள்ளூர் பெண்களே சேர்ந்து அவனை விரட்டி அடித்தனர். மக்களே ஆயுதம்; மக்களே கேடயம் என்பதை இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது .

தமிழ் குறும்படக்காரர்கள் தொடக்க காலத்தில் [1995] போட்டிக்கு எப்படி அனுப்புவது என்று கூட தெரியாமல் இருந்தனர். நிழலில் விழாவில் கலந்து கொள்வதற்க்கான ஆலோசனைகள், எப்படி அனுப்புவது, ஆங்கில துணை தலைப்புகள் அமைத்து கொடுப்பது, படங்களை விழாக்களுக்கு அனுப்பி வைப்பது வரை செய்தோம் .

யமுனா ராஜேந்திரன் லண்டனில் குறும்பட விழா ஏற்பாடு செய்த போது நிழலும் தன் பங்குக்கு படங்களை அனுப்பியது. பிரான்சில் பாரிஸ் நண்பர்கள் வட்டத்துடன் நிழல் இணைந்து சர்வதேச தமிழ் குறும்பட விழாவை நடத்தியது. இதற்க்கு 30 படங்களை அனுப்பினோம். பாரிஸ் நண்பர்கள் பிரான்சுடன் விழாவை நிறுத்திக்கொள்ளாமல் நார்வே, நெதர்லாந்து, ஜெர்மனி வாழ் தமிழர்களுடன் இணைந்து நடத்தினர். இதன் மூலம் சுமார் 60,000 ரூபாயை 13 படங்களுக்கு பிரித்து பரிசளித்தனர். இதுதான் முதன் முதலில் குறும்படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம். இதற்காக உழைத்த நண்பர்களை இந்நேரத்தில் நினைவு கூர்வது அவசியம். பிரெஞ்ச் வாழ் நண்பர்களான அசோக், லக்ஷ்மி, கலைச்செல்வன், வாசுதேவன், பரணிதரன், சாம்சன், நாகேஷ், கிருபன், பிரகாஷ், கதிர்காமு, கர்ண, வ்ன்னியசிங்கம், பாஸ்கரன், இயல்வாணன், பாபு, பிரகலாதன், வசந்தி, பாலகிருஷ்ணன், கு.உதயகுமார், ரமேஷ்சிவரூபன், நா .மகேந்திரன், தி .குகன், எஸ் .சிவதாசன், அசோக்பிரசாத், ஜெர்மனி வாழ் தமிழர்கள் சுசிந்திரன், ஜேகா .நார்வேஜிய தமயந்தி, டென்மார்க் ராஜேந்திரன், கரவைதாசன், கொக்குவில் கோபாலன் முதலிய நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்க நினைக்கிறேன் இது போலவே .நியூ ஜெர்சி சிந்தனையாளர் வட்டம், மெல்பன் தமிழ் சங்கம், [ஆஸ்திரேலிய], சுவிசில் அஜீவனுடன் இணைந்து நடத்தினோம். பல ஆண்டுகளாக டொராண்டோ சுயாதீன திரைப்பட சங்கம் நடந்தும் போட்டிகளுக்கு நிழல் குறும்படங்களை அனுப்பி வருகிறது .இது போலவே இன்றும் அமெரிக்காவில் நடத்தப்படும் ‘fetna’ போட்டி, விம்பம், நார்வே போன்ற நாடுகளில் நடத்தப்படும் போட்டிகளுக்கு குறும்பட படைப்பாளிகளை தயார் செய்கிறது.

நிழலுக்கான சவால் என்று பார்த்தோமானால் எதிர்காலத்தில் மத அடிப்படைவாதிகளும் கார்போரேட் நிறுவனங்களும்தான் இவை இன்று திரைப்பட உலகத்திலும் புகுந்து விட்டன. மக்களுடன் இணைத்து இவர்களின் உண்மை சொரூபத்தை தோலுரித்து காண்பிப்போம்.

*********************************

நிழலின் 25வது குறும்பட பயிற்சிப்பட்டறை
செவ்வாய், 17 ஏப்ரல் 2012( 16:08 IST ) http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1204/17/1120417046_1.htm

தமிழ்ச் சூழலில் இதனை சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பல்லைக்கழகமோ, அரசு நிறுவனமோ செய்ய வேண்டிய ஒன்றை தனி மனிதனாக நிழல் இதழின் ஆசி‌ரியர் ப.திருநாவுக்கரசு செய்து காட்டியிருக்கிறார். பெரும் உழைப்பும் சலன ஊடகத்தின் மீதான அவ‌ரின் தீராக்காதலுமே இதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

குறும்படம் இயக்க வேண்டும், என்னை பாதித்த நிழ்வை ஆவணமாக்க வேண்டும் என்ற உந்துதல் உடைய அனைவருக்கும் ஒரு திறப்பாக அமைந்தது நிழல் நடத்தும் குறும்படப் பயிற்சிப்பட்டறை. குறைவான கட்டணத்தில் தங்கும் வசதிகளுடன் நடத்தப்படும் இந்தப் பயிற்சிப்பட்டறையில் சலன ஊடகத்தின் முக்கியமான அனைத்து அம்சங்களும் – நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங் – சொல்லித் தரப்படும். தமிழின் பிரபல இயக்குனர்களின் தொழில்நுட்பக் கலைஞர்களின் நடிகர்களின் அனுபவப் பகிர்வு இதன் இன்னொரு அம்சம்.

முக்கியமாக பட்டறையின் இறுதியில் குழுவாக திரைக்கதை அமைத்து ஒரு குறும்படத்தை இயக்கி எடிட் செய்யவும் வசதி செய்துத் தரப்படும். இப்படியொரு பட்டறை தமிழகத்தில் இல்லை. அதாவது தொடர்ச்சியாக இயங்கிவரும் பட்டறை.

நிழல் தனது 25வது பட்டறையை ஈரோடு மாவட்டம் பவானியில் மே 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடத்துகிறது. பவானி பி.எஸ். திருமண மண்டபத்தில் நடக்கயிருக்கும் பயிற்சிப்பட்டறையில் அனைவரும் கலந்து கொள்ளலாம். உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்துத் தரப்படும். மேலதிக விவரங்களுக்கு நிழல் ஆசி‌ரியரை 9444484868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நிழலின் பயணம் தொடர நமது வாழ்த்துகள்.

[nggallery id=3].

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *