Nizhal


Tamil English

நிழல் நவீன சினிமாவுக்கான களம்….

நிழல்: திரைப்பட இதழ்:நடமாடும் திரைப்பட சங்கம்; வெளியீட்டு நிறுவனம்.

சினிமாவுக்கு நூற்றாண்டான 1994 ஆண்டு முதல் இன்று வரை 420 கிராமங்களில் உலக புகழ் பெற்ற செவ்வியல் படங்கள்; குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை திரையிட்டு, எது நல்ல சினிமா என்பதை பார்வையாளர்களே உணரும்படி செய்து வருகிறது.
தமிழகத்திலுள்ள 30 மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறை நடத்தி, சாதாரண கிராமப்புற இளைஞனுக்கும் திரைப்பட தொழில் நுட்பத்தை கற்று கொடுத்துள்ளது. 5000 -துக்கும் மேற்பட்டோர் பட்டறை முலம் பலன் அடைந்துள்ளனர். பலர் இன்று திரைப்பட துறையிலும்/ குறும்பட துறையிலும் பணி ஆற்றி வருகின்றனர். குறும்படம் மற்றும் ஆவணபடத் துறை பற்றிய புரிதலை லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் கொண்டு சென்றுள்ளது.
தமிழக இளைஞர்கள் தயாரித்த குறும்படங்களை உலக அளவில் எடுத்து சென்று பரிசுகளும், விருதுகளும் பெற நிழலே முதன் முதலில் வழி வகுத்தது.
பத்து ஆண்டுகளாக பல்வேறு இழப்புகளையும் தாங்கிக்கொண்டு நிழல் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருகிறது. இதில் திரைப்பட வரலாறு, தொழில் நுட்ப கட்டுரைகள், விமர்சனம், பயிற்சி திரைக்கதைகள், பழைய நடிகர்கள் பற்றிய கட்டுரைகள், நேர்முகங்கள், கலந்துரையாடல்கள், உலக திரைப்பட விழாக்கள் பற்றிய செய்திகள் போன்றவை வெளியிடபடுகின்றன

நிழல் வெளியிட்டு நிறுவனம் மூலம்
௧. சொல்லப் படாத சினிமா (குறும்பட, ஆவணப்பட வரலாறு),
௨. மக்களுக்கான சினிமா
௩. இரானிய சினிமா
௪. தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்
௫. மாயவிளக்கு ( பெர்க்மன் வாழ்க்கை வரலாறு )
௬. போர்க்கப்பல் பொடம்கின் ( Battleship Potemkin ) (shot by shot விமர்சனம் )

தமிழகத்தில் பல கிராமங்களில், கிராமப்புற திரைப்பட சங்கங்களை தோற்றுவித்துள்ளது.

திரைப்பட துறையைப் பற்றிய ஆவண காப்பகம் ஒன்றை நிழல் நிறுவி உள்ளது. இதில் உலக திரைபடங்கள் / குறும்படங்கள் / ஆவணப்படங்கள் / திரைப்பட புத்தகங்கள் / இதழ்கள் / புகைப்படங்கள் / இசை தட்டுகள் / பாட்டு புத்தகங்கள் முதலியவற்றை நிழல் விரும்பி சேகரித்து வருகிறது. வாசகர்களுக்கு கிடைக்கும் மேல்கண்டவற்றை நிழலுக்கு அனுப்பி வைக்கும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

ப. திருநாவுக்கரசு
31/48 ராணி அண்ணா நகர், கே கே நகர், சென்னை – 600078 / arasunizhal@gmail.com

=============================================================

நிழல் Nizhala movement for modern film…

Nizhal a mobile film movement; a film magazine; a publishing house.

The year 1994 saw the centenary celebrations of world cinema. On this occasion few individuals associated with films felt the need to take the good films to the villages of Tamilnadu. This necessitated the formation of a film movement Nizhal (Shadow) – a mobile film movement for modern and good films.

Nizhal started screening world and Indian classical films in the villages of Tamilnadu. For the people where the opportunity of seeing good film is remote and had to content with the ‘masala’ commercial stuff, the need arose to explain “what is a good film?” This necessitated conducting workshops on film appreciation. Centers were established at many places with people who have experience and skill to impart knowledge to others on good film.

In continuation of these activities a need arouse for magazine to discuss and debate about good films and also to carry the news of Nizhal activities which were spread across Tamilnadu. Thus in June, 2001 the first issue of the magazine Nizhal was brought out. In Nizhal magazine film history, criticism, articles on film appreciation, introduction about of world and Indian cinema, articles on film technology, articles of previous era artistes and film makers and also about the details of films screened at various parts of Tamilnadu were published. Internationally acclaimed directors and films were introduced and debated. This included people in many parts to come forward requesting screening of films in their area.

Through Nizhal we collected all the short films made in Tamil and send them to various film festivals. In association with Paris Nanbarkal Vattam, Europe film festivals, Switzerland, Chinttanai Vattam – New Jersey festivals were held and trophies and prize money were distributed to encourage short film making and short film directors. Eminent personalities associated with film like Tedore Bhaskaran, Amshan Kumar, Vannanilavan, Vittal Rao, Arun Mozhi, Thi. Su. Sadasivam, Swarnavel, Srinivasan, Pavannan, Sa. Devadoss, Pa. Thirunavukarsu, Issakiappan, Ka. Panjangam, Aranthai Manian, Ravi Elangovan, Venkat Swaminathan, Yammuna also started publishing the screenplays of many international and national films. Nizhal had also published articles and initiated debates on commercial “masala” films as these too have things or two on cultural issues. The impacts of these are clearly visible. The small literary magazines in Tamil have started giving more prominent space for feature films and short films.

In continuation of the above activities a publishing house under the name Nizhal was started and more than 10 blocks on films were published.

All the above activities have been done with generous contribution of likeminded people and friends. Of late we find it extremely difficult to sustain the above activities because of economic constraints. We do not get support from any institution or establishments, in spite of our repeated request and explaining to them the importance of this movement.

Hence, we request you to contribute in good spirit, generously and support the movement – Nizhal the magazine for modern cinema, Alternate cinema and short films. Nizhal has no other option but to come to you for support and Nizhal assures you that it will continue to work towards meaningful and modern films in good faith and hopes…

THANK YOU…

Related Websites:
Pathiyam.com
Lingas Studios.com

One thought on “Nizhal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *