How Created

How Nizhal Short Film Workshops Created Read in English….
நிழல் குறும்பட பயிற்சிபட்ட்றை உருவானது எப்படி…தமிழில்…

     எவ்வாறு…?எனது நூலான “சொல்லப்படாத சினிமா (2004) குரும்படங்களையும், ஆவணப்படங்களையும் ஒருசேர இணைத்து இந்திய அளவில் வெளி வந்தது. அப்பொழுது திருப்பூர் “பதியம்” வாசன், இதை வைத்து நாம் குறும்பட பயிற்சி பட்டறை நடத்தலாம் என்றார். அவரது வழிகாட்டுதலின்படி, முதலில் அவிநாசியை அடுத்த கிராமத்தில் 65 பேர் கலந்து கொண்ட ஒருநாள் பட்டறை நடந்தது. அதில் நானும், இயக்குனர் அருண்மொழியும் கலந்து கொண்டு நடத்தினோம். ஒருநாள் அதற்கடுத்த பட்டறையில் மூன்று நாளானது. பிறகு ஐந்து, ஆறு. ஏழு என்று விரிந்து கொண்டு போனது. அதற்குகேற்ப பாடத்திட்டமும் அதிகரித்தது, நடத்துநர்களும் அதிகரித்தனர்.

     எதற்காக…?குறும்படப் பயிற்சிப் பட்டறை யாருக்காக> என்று கேள்வி எழுந்தது. வசதி குறைந்த கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கும் / மாணவர்களுக்கும் / கல்லுரி சென்று படிக்க முடியாத நடுத்தர வயதினர்க்கும் என்பது முடிவு செய்யப்பட்டது. அதற்கேற்ப பாடத்திட்டம் உருவக்கப்பட்டது. மூன்றாண்டு பாடத்தை 85 மணி நேரத்தில் ஏழு நாட்களுக்குள், நடிப்பு, திரைக்கதை, ஒளிபதிவு, படத்தொகுப்பு, ஒப்பனை முதியவை எளிய முறையில் அதிகளவில் கற்றுக் கொடுக்கப்பட்டு, கடைசி நாள் அவர்களையே ஒரு குறும்படம் எடுக்கவைகிறோம். பின்பு குறும்தகுடுளும், சான்றிதழும் வழங்கக்படுகிறது. இதனை இந்திய அளவில், பல திரைப்பட இயக்குனர்களும், வெளி நாட்டு ஆய்வாளர்களும் வியந்து பாராட்டயுள்ளனர். ” பார்வையாளர்களை பங்கேற்பாளர்களாக மாற்றியது தான்” நாங்கள் செய்த வித்தை..!!! “எல்லாரும் பேனா வைத்துகொள்வதைப் போல, கேமரா வைத்து கொள்ளவேண்டும்” என்று கோடார்ட் சொன்னது, சினிமாவை ஜனநாயகப்படுத்ததான் என்பதை புரிய வைத்தோம். மேலும் சினிமா தொழில்நுட்ப புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து அவற்றை நல்ல தமிழில் கொண்டு வந்தது. சினிமா தொடர்பான பல கலை சொற்களை உருவாக்கியது. புகழ் பெற்ற பல ஆங்கில நூலின் பகுதிகளை நிழல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மெத்தப்படித்த அறிவாளிகளுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த பல செவ்வியில் படங்கள் கிராமங்களை சென்றடைந்தது.

பயிற்சிபட்ட்றை வரலாறு…:- இதுவரை நடத்தப்பட்ட குறும்பட பயிற்சிப்பட்டறைகள் அனைத்தும் நகரத்தை அடுத்த கிராமங்களிலேதான் நடந்தது. தமிழகத்தில் இதுவரை(எப்ரல் 2015) 37 இடங்களில் நடத்தப்பட்டுள்ளது :
1. அவிநாசி (காசிபாளையம் ), 2. கோவை (கணுவாய்) 3. காரைக்கால் 4. உடுமலைப்பேட்டை 5. வெள்ளிச்சந்தை (தர்மபுரி) 6. இராமநாதபுரம் 7. கைலாச நகர் (திருச்சி) 8. ஆழ்வார் குறுச்சி (திருநெல்வேலி) 9. சிவகங்கை 10. மதுரை 11. வெள்ளாநூர் (சென்னை) 12. மன்னார்குடி13. தக்கலை (நாகர்கோயில்) 14. வலசையூர் (சேலம்) 15. கொத்தட்டை (சிதம்பரம்) 16. கிருஷ்ணகிரி 17. ரெட்டியாபட்டி (அருப்புக்கோட்டை) 18. பிளவக்கல் அணை (ஸ்ரீவல்லிபுத்தூர்) 19. உசிலம்பட்டி (தேனி) 20. புதுச்சேரி 21. வளரசவாகம் (சென்னை) 22. ஆல்பா கல்லுரி (சென்னை) 23. செஞ்சி 24.நாமக்கல் 25.பவானி 26.ஆல்பா கல்லூரி 27. தஞ்சாவூர் 28.செட்டி பாலையம் 29.சக்தி பாலிடெக்னிக் கல்லூரி 30.ஆல்பா கல்லூரி 31.அரசு கால்நடைக் கல்லூரி, சென்னை 32.தேனீ 33.சக்தி பாலிடெக்னிக் கல்லூரி 34.ஆல்பா கல்லூரி 35.சேலம் 36.கோயம்பத்தூர் எல்.ஜீ. 37. பாண்டி 38. சக்தி பாலிடெக்னிக் கல்லூரி

குறும்பட பயிற்சி பட்டறைக்கு இலங்கை, சிங்கப்பூர், இந்தியாவின் பல மாநிலகளில் இருந்தும் பலர் வந்து பயிற்சி பெற்று சென்றுள்ளனர்

சாதனைகள்:- எங்களிடம் பயிற்சி பெற்ற பலர் குறும்பட துறையிலும், திரைப்பட துறையிலும், உதவி இயக்குனர்களாக / புகைப்படகாரர்களாக / படத்தொகுப்பு / ஒளியமைப்பு / முதிலிய துறைகளில் நுழைந்துள்ளனர். பட்டறை வாயிலாக இதுவரை 5000 பேர் பயனடைந்துள்ளனர். குறும்படம் பற்றி ஒரு லட்சம் பேரிடம் செய்தியை கொண்டு சென்றுள்ளது. பட்டறை செய்யும் சேவைகளை கண்டும், படித்தும் பார்த்த இயக்குநர்களான ஜனநாதன், பாலு மகிந்திரா, பாலாஜி சக்திவேல், மிஷ்கின், சசி குமார், எஸ்.அர். கதிர், அமீர், (பசி) துரை, கவிஞர் அறிவுமதி, வ.கௌதமன், களஞ்சியம், சண்முகசுந்தரம், ராஜ் மோகன், ராசி அழகப்பன், ராம், பாண்டிராஜன், சத்யா, சுந்தர், முதலியோர் பட்டறைக்கு வந்து மாணவர்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கமூட்டி உச்சாகப்படுத்தி சான்றிதழும் தந்துள்ளனர்.

In English, to be published soon…..>>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *