நாகையில், அரசு அனைத்து சங்க போராட்ட குழு சார்பில் மாலை நேர தர்ணா...

நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் அனைத்து சங்க போராட்டகுழு சார்பில் இன்று ( 26.07.22 ) நாகை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு, மாவட்டத் தலைவர் பா.ராணி தலைமையில் மாலைநேர தர்ணா நடைபெற்றது. நாகை வட்டத் தலைவர் எஸ்.இரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் கோரிக்கைகள் விளக்கவுரையாற்றினார். ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத் தலைவர் வி.பாலசுப்பிரமணியன், ஓய்வூதியர் சங்கத் தலைவர் எம்.பி.குணசேகரன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.இராஜூ, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.முத்துகிருஷ்ணன், புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க தலைவர் விஜயகுமார், மாவட்ட இணைச் செயலாளர் ஜெ.ஜம்ருத்நிஷா உள்ளிட்ட பலர் உரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன்சேரல் நன்றி உரையாற்றினார். அகவிலைப்படி உயர்வு, சரண்டர் மீண்டும் வழங்குதல், புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, காலிப்பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 120 பெண்கள் உட்பட 160-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணாவில் பங்கேற்றனர். செய்தியாளர் - மணிவண்ணன் / நாகைமாவட்டம்

நாகையில், அரசு அனைத்து சங்க போராட்ட குழு சார்பில் மாலை நேர தர்ணா...
நாகையில், அரசு அனைத்து சங்க போராட்ட குழு சார்பில் மாலை நேர தர்ணா...