பொன்னேரி ஆண்கள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதிய 130 மாணவர்கள்!

பொன்னேரி ஆண்கள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆர்வமாக ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதிய 130 மாணவ மாணவியர்கள்.

பொன்னேரி, ஜூலை-1 : பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மத்திய அரசு நிதி உதவியின் கீழ் இயங்கும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐஐடி), தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி) ஆகியவற்றில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் எழுதி வருகின்றனர்.

அதன்படி பொன்னேரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐஐடி உயர்கல்வியில் செல்வதற்கு இந்த நுழைவுத் தேர்வை எழுதினர். வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் மேற்படிப்பு பயல வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஆர்வமாக தேர்வு எழுதினர்.

தேர்வினை எழுதும் மாணவ,மாணவியர்களை பொன்னேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ராமமூர்த்தி மற்றும் துணை தலைமை ஆசிரியர் ஆர்.சுரேஷ் ஆகியோர் தேர்வு எழுதுவதற்கு முன் வாழ்த்தினர்.