மதுரை திருமங்கலம் நகராட்சியில் வார்டு வரையறை பட்டியலில் குளறுபடி : திமுக, அதிமுக உள்ளிட்ட 17 கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மதுரை திருமங்கலம் நகராட்சியில் வார்டு வரையறை பட்டியல் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு நகராட்சி ஆணையர், தலைவர், துணை தலைவர் ஆகியோர் அவசர கூட்டம் ஏற்பாடு செய்தனர். வார்டு வரையறை பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், மொத்தம் 27 கவுன்சிலர்களில், 17 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 கவுன்சிலர்கள் கலந்து கொண்ட அவசர கூட்டம் நகராட்சி தலைவர் ரம்யா தலைமையிலும், துணைத் தலைவர் ஆதவன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் கலந்து கொண்டு முக்கிய தீர்மானமான வார்டு வரையறை பட்டியலை புதுப்பிக்கப்பட்டுள்ளதை முழுவதுமாக நிறைவேற்றுவதாக கூறி, ஒரே ஒரு தீர்மானத்திற்காக அவசர கூட்டம் நடைபெற்றது. அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதாக கூறும்போது, திமுக கவுன்சிலர்கள் 11 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் ஆறு பேரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
அதாவது வார்டு வரையறை பட்டியலில் குளறுபடிகள் உள்ளதாகவும், ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வார்டில் வாக்குகள் உள்ளதால் அதனை சீர் செய்துவிட்டு தொடர்ந்து கூட்டத்தை நடத்த கூறினர். அதற்கு நகராட்சி ஆணையாளர் மறுப்பு தெரிவித்து அரசு தீர்மானம் என்பதால் அதனை நிறைவேற்றியே தீருவேன் என உறுதியாக கூறியுள்ளார். அதனால், திமுக அதிமுக உள்ளிட்ட 17 கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
- செய்தியாளர் வி.காளமேகம், மதுரை
நிழல்.இன் / 8939476777