June 21, 2021

கும்முடிபூண்டி ஆத்துப்பாக்கத்தில், அமிர்தம்மாள் தேசிய கொடியை ஏற்றினார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், பட்டியலினப் பெண் தலைவர் அமிர்தம்மாள் கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார். கடந்த 8 மாதங்களாகவே இவரை ஊராட்சி மன்ற தலைவராக பணி செய்ய விடாமல் துணைத் தலைவர் ரேவதி விஜயகுமார், ஊராட்சி செயலர் சசிக்குமார் ஆகியோர் தடுத்து வந்துள்ளனர். கடந்த சுதந்திர தினத்தன்றும் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள் கொடியேற்ற விடாமல் தடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

அந்த சம்பவம் குறித்து, செய்தி சேகரிக்க சென்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் எழில் தாக்கப்பட்டு, பின் துணை தலைவரின் கணவர் விஜயகுமார், ஊராட்சி செயலாளர் சசிக்குமார் ஆகியோரால், சிறை பிடிக்கபட்டார். அதன் பின் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி அவர்கள் உத்தரவின் பேரில், பொன்னேரி ஆர்.டி.ஓ விந்தியா, தாசில்தார் தமிழ்செல்வன், கும்முடிபூண்டி டி.எஸ்.பி ரமேஷ் ஆகியோர் சென்று எழிலை மீட்டு சிறைபிடித்தவர்களை கைது செய்தார். பின்னர், ஆர்.டி.ஓ விந்தியா விசாரனை நடத்திய போது, ஆர்.டி.ஓ விடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளுர் மாவட்ட செயலாளரும், அறம் திரைப்பட இயக்குனருமான கோபி நாயனார், மாவட்ட ஆட்சி தலைவர் முன்னிலையில், அமிர்தம்மாள் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் தேசிய கொடியை ஏற்ற செய்யவேண்டும், என கோரிக்கை வைத்தார்.

நேற்று, பட்டியலினப் பெண் தலைவர் தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து, அறிக்கை அளிக்குமாறு மாநில மனித உரிமைகள் ஆணையம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், இன்று ஊராட்சி மன்ற அலுவலக வாயிலில் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பெயர் எழுதப்பட்டது. புதியதாக கொடிக்கம்பம் நடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் முன்னிலையில், ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கிராம மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ” ஜனவரியில் நடந்த சம்பவம் எங்கள் கவனத்திற்க்கு வரவில்லை, இனி இது போன்று சம்பவம் நடக்காமல் இருக்க வட்டார வளர்ச்சி அலுவலர் இந்த ஊராட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தி இருக்கிறேன். இந்த ஊராட்சிக்கு புதியதாக வேறு உதவியாளர் நியமிக்கபடுவார் எனவும், மேலும் இது போல் நமது மாவட்டத்தில் வேறு எந்த ஊராட்சியில் நடைபெற்றாலும், என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், நான் உடனடி நடவடிக்கை எடுப்பேன் ” என தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய, திருவள்ளுர் மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளர் அரவிந்தன், “இந்த சம்பவம் தொடர்பாக, ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், செய்தியாளரை தாக்கிய, ஊராட்சி பிரதிநிதியின் கணவர் மீது, வழக்கு பதியபட்டு உள்ளதாகவும்” கூறினார்.

ஊராட்சிமன்ற தலைவர் அமிர்தம்மாள் பேசுகையில், நான் இன்று ஊராட்சிமன்ற தலைவராக இருப்பதற்கு காரணம் என் ஊற்றார், உறவினரை விட ஊர் பகுதில் உள்ள அனைவரும் தான் காரணம், அவர்கள் என்றும் எனக்கு அதரவு கொடுக்கின்றனர். அவர்களுக்கு நான் என்றும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். ஆனால், என்னை செயல்படலிடாமல், ஊராட்சி செயலாளரும், துணை தலைவரின் கணவரும் தான் தொடர்ந்து தொல்லை கொடுத்து கொண்டு இருந்தனர். குடியரசு தினத்தில் அவர்கள் என்னை கொடியேற்றவிடாமல் தடுத்த போது என் தரப்பை சேர்ந்தவர்கள் சிலர் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் என கூறிய போது கூட, நான், அவர்கள் சிலர் மட்டும் ஊர் கிடையாது. ஊரில் உள்ள அனைவரிடமும் இதை முறையிடலாம் என கூறினேன். ஆனால் இந்த சுதந்திர தினத்தன்றும் அவர்கள் என்னை கொடியேற்ற விடாததால், நான் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். இதில் என் தவறு எதும் இல்லை, எனக்கு அதிக வாக்களித்த எங்கள் ஊர் மக்களுக்கு என்றும் மதிப்பளிப்பேன்” என, ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள் தெரிவித்தார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed