May 14, 2021

பொன்னேரியில், அமமுக கட்சியின் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட சார்பில், 2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்…

1 min read

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில், பொன்னேரியில் 2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான, பொன்ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கழக துணை பொதுச் செயலருமான செந்தமிழன் முன்னிலை வகித்தார்.

சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கும் விதம் கழகப் பணிகளை எவ்வாறு சிறப்பாக செய்வது என்பது குறித்து கழக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, கழக அமைப்புச் செயலாளர் ஒட்டப்பிடாரம் சுந்தர்ராஜ், கழக வர்த்தக அணி செயலாளர் கரிகாலன், கழகச் செய்தித் தொடர்பாளர் இளம் தமிழ் அர்வளன்,கழக மீனவர் அணி செயலாளர் ஆறுமுகம், கழக அம்மா தொழிற் சங்க துணைச் செயலாளர் சிவசங்கர், துணை கழக அமைப்புச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

கழக நிர்வாகிகள் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் சங்கர்ராஜா, லோகநாதன், கிருஷ்ணன், சுரேஷ், தன்ராஜ், ஜவகர் துரை, ராம்குமார், செங்கழுநீர் மேடு பிரகாஷ், ஆனந்த்ராஜ், ஆரணி துளசி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பொன்னேரி பேரூர் கழக செயலாளர் தயாளன் நன்றி கூறினார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *