January 26, 2022

கும்மிடிப்பூண்டி சிறுபுழல்பேட்டை மற்றும் சாணாபுத்தூரில், திமுக சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம்…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், சிறுபுழல்பேட்டை ஊராட்சியிலும், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சாணாபுத்தூரிலும் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறுபுழல்பேட்டையில், திமுக நிர்வாகிகள் வெற்றிவேந்தன், கவிராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் திருமலை, பாஸ்கரன். ராமஜெயம், மணிமேகலை சுகு, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், பொறுப்பு குழு உறுப்பினர் அன்புவாணன், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், திமுக நிர்வாகிகள் ரமேஷ், பரத்குமார், பழன்ராஜ், பாலுமகேந்திரா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று மத்திய, மாநில ஆட்சிகளால் தமிழகத்தில் விலைவாசி உயர்வு ஏற்பட்டு ஏழை எளிய மக்கள் அவதிப்படும் சூழலில் பொதுமக்கள் வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் சிறுபுழல்பேட்டை பகுதி கோரிக்கைகளை எடுத்துக் கூறியதுடன், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று பதாகையில் கையொப்பம் இட்டு சென்றனர்.

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சாணாபுத்தூர் ஊராட்சியில் திமுக நிர்வாகிகள் பார்த்தசாரதி, கதிரவன் ஏற்பாட்டில், நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஏசுரத்தினம், பரத்குமார், நிர்மலா பார்த்தசாரதி, மாவட்ட கவுன்சிலர் சாரதா முத்துசாமி, மாவட்ட பிரதிநிதி முத்துசாமி, கணேசன், ஸ்ரீதர், மாவட்ட இலக்கிய அணி புரவலர் ஜி.மனோகரன்,
சந்திரமோகன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் இ.ஏ.பி.சிவாஜி, கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, எம்.எல்.ரவி பேசினார்கள். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 10ஆண்டில் அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் முறையாக செயல்படவில்லை என்றும், மக்களின் குறைகளை தீர்க்க திமுகவிற்கு வரும் தேர்தலில் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் சாணாபுத்தூரில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றுதல், கூடுதலாக குடிநீர் மேல்நிலைத் தொட்டியை அமைத்தல், சாலைகளை மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திய பொதுமக்கள், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்கின்ற பதாகையில் கையொப்பம் இட்டு சென்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed