June 21, 2021

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சார்நிலை கருவூலம் எழில்மிகு தோற்றம்…

1 min read

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசப்பாக்கத்தில், இது நாள் வரை தனியாக கருவூலகம் இல்லாத நிலை இருந்து வந்தது, இந்நிலையில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், V.பன்னீர்செல்வம் அவர்கள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் கலசபாக்கத்தில் அரசு கருவூலகம் புதியதாய் அமைத்திட உத்தரவிட்டு, அதற்கான புதிய கட்டிடம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி, தற்போது கலசபாக்கத்தில் அரசு கருவூல புதிய கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், V. பன்னீர் செல்வம் அவர்கள் மற்றும் கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக, இன்று பயன்பாட்டுக்கு புதிய கருவூல கட்டிடம் வந்துள்ளதால் அவர்களை இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed