June 21, 2021

பெரியபாளையம் அருகில், வடமதுரையில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது…

1 min read

முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான, எம்ஜிஆர் அவர்களின் 104 வது பிறந்தநாளை முன்னிட்டு
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை அரசு பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மகேந்திரன், மற்றும் எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், கிளைச் செயலாளர் பேட்டை மேடு சீனிவாசன், நிர்வாகிகள் ராஜீவ்காந்தி, தாமரைக்கனி தமிழ்மன்னன், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed