May 14, 2021

“மக்கள் பாதை” இளைஞர்கள் வரும் காலத்தில், அரசியலில் பங்கு பெறுவார்கள், ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ். பதில்…

1 min read

திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், ஆத்தூரில் ஊராட்சியில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தன் மனைவி மற்றும் மகளுடன் கலந்துகொண்டார். அவர்களுக்கு, மக்கள் பாதை அமைப்பினர் மற்றும் கிராம மக்கள் மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்ப்பு அளித்தனர்.

அதை தொடர்ந்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு ஆண் குழந்தைக்கு, திலீபன் என பெயர் சூட்டினார். பின்னர் குழந்தைகளின் சிலம்பாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகளையும், பெண்களுக்காக நடத்தபட்ட உரியடி, இளைஞர்களின் வீர விளையாட்டுகளையும், கண்டு மகிழ்ந்தார். பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய சகாயம் அவர்கள், மக்கள் பாதை அமைப்பில் இளைஞர்கள், மாணவர்கள் என துவங்கி அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக இணைந்து, வரும் காலங்களில் சமூக மாற்றத்திற்காக களத்தில் சிறப்புடன் இயங்கி வருகிறார்கள்.

நிர்வாக மாற்றங்களை இது வருங்காலத்தில் உருவாக்கக்கூடும். நான் மிகவும் நேசிக்கக்கூடிய தமிழ் சமூகம் அடிமைதனத்தில் இருந்தும் விழித்தெழ வேண்டும், அதனை தட்டி எழுப்பும் விழிப்புணர்வு பரப்புரையை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிவருகிறேன்”
“எம்முடைய தமிழ் சமூகம் நேர்மையான சமூகமாக இருந்து இருந்தால், அது நேர்மையான தலைவர்களை வெளி கொண்டு வந்திருக்கும்.

நேர்மையான தலைவர்கள் இருந்திருந்தால், இந்திய நாட்டில் மட்டும் இன்றி உலக சமூகங்களிலேயே ஒப்பற்ற சமூகமாக தமிழ் சமூகம் திகழ்ந்திருக்கும். இப்போது அந்த நேர்மை குறைபாடு நம் சமூகத்தில் இருப்பதை பார்க்கிறேன். நான் பல நெருக்கடிகளுக்கு இடையே இதுவரை நேர்மையாக பணியாற்றினேன். அதனால் பல,பல இன்னல்களை அனுபவித்து விட்டேன்.

தற்போது, நேர்மையான நிர்வாகத்தை உருவாக்க இன்றைய இளைஞர்கள் முயல்கிறார்கள். அதில், இருந்து
நிச்சயமாக நேமையான நிர்வாகத்தையும் அவர்கள் எதிர்காலத்தில், ஒரு நேர்மை சமூகத்தை உருவாக்கும் முடிவுகளை இவர்கள் எடுப்பார்கள், தகுதியுள்ள, நேர்மையுள்ள நெஞ்சுரமுள்ள இந்த இளைஞர்கள், அவர்களுக்குள் ஒருவரை தேர்வு செய்து பின் அரசியல் களத்திலும் பங்கேற்கக்கூடும்” என்று பதிலளித்தார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *