July 28, 2021

அறந்தாங்கி அருகே, திருவாப்பாடி கிராமத்தில் கனமழையால் வயலில் மூழ்கியுள்ள பயிர்களுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை…

1 min read

அறந்தாங்கி அருகே திருவாப்பாடி, அத்தானி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கனமழை காரணமாக வயலில் மூழ்கியது. தற்போது தண்ணீர் வடிந்த நிலையில் தண்ணீரில் மூழ்கியுள்ள மூழ்கியிருந்த பயிர்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி பகுதியில் மழை காரணமாக முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாப்பாடியை சுற்றி உள்ள கிராமங்களான அத்தானி, புறங்காடு, தென்பாதி, ஏகணிவயல், ராயன்வயல், இடையாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு உடனயாக, நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *