June 21, 2021

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தைப்பூச தினத்தை முன்னிட்டு, வள்ளலாரின் தாயார், “சின்னம்மையார் இல்லத்தில்” சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது…

1 min read

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் தைப்பூச தினத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகளும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பொன்னேரி சட்டமன்றத் உறுப்பினர் பலராமன் அவர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

பொன்னேரி சுற்றுவட்டார பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்து ஜோதி தரிசனம் கண்டு பரவசம் அடைந்தனர். பசி தீர்ப்பது பரம புண்ணியம் என்னும் வள்ளலாரின் அருட்பா மொழிக்கேற்ப ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு பசியாற்றப்பட்டது.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed