September 16, 2021

அறந்தாங்கியில் நடைபெற்ற, மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் அறந்தாங்கி அணி முதலிடம்…

1 min read
Spread the love

அறந்தாங்கியில், மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட அறந்தாங்கி அணி முதலிடம் பிடித்தது. மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் மதுரை,திருச்சி, கோவை, செங்கல்பட்டு, தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டிணம், நெல்லை, இராமநாதபுரம், விருதுநகர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அணிகள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடின.

அதில், அறந்தாங்கி அணி முதாமிடத்தையும், பட்டுக்கோட்டை அணி இரண்டாமிடத்தையும் . நாகப்ட்டணம் அணி மூன்றாமிடத்தையும், மதுரை அணி நான்காவது இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பையை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இஏ. ரெத்தினசபாபதி வழங்கினார். போட்டிகளை அறந்தாங்கி கூடைப்பந்தாட்ட கழகத்தினர் செய்திருந்தனர் . இந்நிகழ்ச்சியில் கூடைப்பந்தாட்டத்தை சேர்ந்த பீர்சேக், சுப்பிரமணியன், தாயுமாணவன், பாரதிதாசன், காளிதாஸ், பாலு, சிவா, கார்த்திக், மணிகன்டன்,குவின்டன், பிரசாந்த், நிவேதன், குமார்,ஜெகதீஸ்பாபு, கிரண், குமார், அருண், தினேஷ் வடிவு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நுழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed