September 26, 2021

ஆவுடையார் கோயிலில், “32வது சாலை பாதுகாப்பு மாத விழா,” விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது……

1 min read
Spread the love

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், 32வது சாலை பாதுகாப்பு வாரம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நெடுஞ்சாலைத் துறை சார்பில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் ஆவுடையார் கோவில் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி மொழிகள் எடுத்துக் கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி ஆனது ஆவுடையார் கோவில் நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகத்தின் முன்தொடங்கி,
அவுடயர்கோவில் ரத வீதிகளான நான்கு வீதி பகுதிகளிலும் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியானது கோட்ட பொறியாளர் சேதுபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, உதவி கோட்ட பொறியாளர் செய்யது இப்ராஹிம் தலைமையில், உதவி பொறியாளர்கள் அருண்,வீரமுத்து ஆகியோர் முன்னிலையில் ஆய்வாளர் ஆறுமுகம் சேவியர்,முத்து, கருப்பையா, அருளானந்து, சோனமுத்து,
ராஜமாணிக்கம்,முத்து உள்ளிட்ட நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பலர் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed