September 16, 2021

பெரியபாளையம் அருகே, அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து தாலி, உண்டியல் பணம் திருட்டு. போலீசார் விசாரணை…

1 min read
Spread the love

மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி போந்தவாக்கம் கண்டிகையில், கிராம தேவதையான காணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி நேற்று பூட்டி விட்டு இன்று காலை பூஜைகளுக்காக திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு உள்ளே சென்று பார்த்ததில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி, உண்டியல் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆரணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் இந்த கிராமத்தில் மற்றொரு அம்மன் கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்த நிலையில் தொடர் கொள்ளை நடைபெறுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed