September 26, 2021

விவசாயிகளை தீவிரவாதிகளுக்கு நிகராக, பார்க்கிறதா மத்திய அரசு…

1 min read
Spread the love

பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற எதிரி நாடுகளுக்கு எல்லையில் அமைக்கப்பட வேண்டிய தடுப்புகளை எல்லாம் நமது மத்திய அரசு தலைநகரில் அமைத்து வருகிறது. மேலும் பல பிரபலங்களை விவசாயிகளுக்கு எதிராக ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட வைத்து விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப முயன்று வருகிறது.

எல்லையில் போராடும் விவசாயிகள் டெல்லி நகரத்திற்குள் நுழையாத வகையில் இரும்பு பேரிகார்டுகள், முள்கம்பி வேலிகள், சிமெண்டு தடுப்புகள் என மிகப்பெரிய அரண்களை அமைத்து காவல்துறையினர் பல அடுக்கு தடுப்புகளை அமைத்துள்ளனர்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். 70 நாட்களை கடந்து கடும் குளிர், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருவதால்,

அரசு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் 11 தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்தப்படி உள்ளது.
விவசாயிகள் கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. செங்கோட்டையில் விவசாயிகள் கொடியை பறக்க விட்டனர். இதுதொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். இது விவசாயிகளை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.


விவசாயிகளை எல்லையில் இருந்து காலி செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என்று பாரதிய கிஷான் யூனியனின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைட் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதோடு விவசாயிகள் மேலும் திரண்டு வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

– G.பாலகிருஷ்ணன் நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed