September 16, 2021

சேலத்தில், போலீஸ் – பொதுமக்களுக்கு இடையேயான நல்லுறவு இறகு பந்து போட்டி…

1 min read
Spread the love

ரோட்டரி கிளப் ஆப் சேலம் மெட்ரோபாலிஸ் மற்றும் சேலம் மாநகர காவல்துறை இணைந்து நடத்திய போலீஸ் பொதுமக்களுக்கு இடையே ஆன நல்லுறவு இறகு பந்து போட்டி சேலம் சின்னதிருப்பதியில் உள்ள தி கோல்டன் ஹெல்த் கிளப்பில் நேற்று (06.02.2021 ஆம் தேதி) நடைபெற்றது. இப்போட்டியினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் டி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் மகளிருக்கான அணியில் பெண் காவல் ஆய்வாளர்கள் எம்.நித்தியா மற்றும் டி.சிவகாமி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். உயர் அதிகாரிகளுக்கான அணியில் செல்வன் பிரித்வின் மற்றும் தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர்கள் முதலிடம் பிடித்தனர். ஆண்களுக்கான அணியில் தலைமை காவலர்கள் செந்தில் மற்றும் சரவணன் ஆகியோர்கள் முதலிடம் பிடித்து இப்போட்டிக்கான சுழல் கோப்பையை தட்டிச் சென்றனர்.

மாலையில் நடைபெற்ற விழாவில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார். உடன் காவல் அதிகாரிகள், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் – சேலம் , தங்கதுரை
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed