June 19, 2021

அறந்தாங்கி மருத்துவர் சங்கத்தின் சார்பில், கலப்பு மருத்துவ முறையை கண்டித்து , உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மூக்குடி கிராமப் பகுதியில் அமைந்துள்ள இந்திய மருத்துவ சங்கம் அறந்தாங்கி கிளையில் கட்டிட வளாகத்தில் அறந்தாங்கி மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில், மருத்துவர்கள் மத்திய அரசு அறிவித்துள்ள கலப்பு மருத்துவ முறையை உடனடியாக ரத்து செய்திட கோரி அறந்தாங்கி மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, அறந்தாங்கி மருத்துவர் சங்க தலைவர் மருத்துவர் லக்ஷ்மிநாராயணன் கூறுகையில், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, அலோபதி ஆகிய மருத்துவ முறைகளை ஒன்றாக இணைத்து மத்திய அரசு நித்தி ஆயோக்கை எனும் முறையில் கலப்பட மருத்துவ முறையை அறிமுகப்
படுத்தியுள்ளது.

இந்த மருத்துவ முறை செயல்பாட்டிற்கு வந்தால், அறுவை சிகிச்சை முறைகள் எந்தவித முன் பயிற்சியும் இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறையைக் கையாண்டால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படும். எனவே, முறையாக அறுவை சிகிச்சை மருத்துவம் படித்த மருத்துவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இப்படி செய்தால் மட்டுமே பொது மக்களின் ஆரோக்கியத்தோடும் உயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முடியும், உடனடியாக மத்திய அரசு இந்த திட்ட முறையை ரத்து செய்திட வேண்டும் என, இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் அறந்தாங்கி கிளையின் தலைவர் டாக்டர் லட்சுமிநாராயணன் கூறினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அறந்தாங்கி சேர்ந்த மருத்துவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஆனந்தன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed