June 21, 2021

மணமேல்குடி கோடியக்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி கோடியக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர். ஆண்டுக்கு ஒருமுறை வரும் தைஅமாவசை மிகவும் முக்கியமானது இந்துக்களுக்கு. இந்த நாளில் மண்ணைவிட்டு மறைந்தவர்கள் மீண்டும் ஒருமுறை பூலோகத்திற்கு தங்களது சந்ததியினரை சந்திக்க வருவதாகவும் ஐதீகங்களில் கூறுகின்றனர்.

ஆகவே இந்தநாளில் மறைந்த முன்னோர்களை நினைத்து கடலில் நீராடி விரதமிருந்து வணங்கினால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது பொதுமக்களின் எண்ணம். ஆகையால் அறந்தாங்கி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விரதமிருந்து கோடியக்கரை கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அங்குள்ள விநாயகரை வணங்கி செல்கின்றனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கோடியக்கரை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தது.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed