June 19, 2021

உலகத் தமிழ் இயக்க பேரவை தலைவர் பழ.நெடுமாறன் அவர்களுக்கு கொரனா தொற்று உறுதி, மருத்துவமனையில் அனுமதி…

1 min read

உலகத் தமிழ் இயக்க பேரவை தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக அவருக்கு லேசான காய்ச்சல், சளி இருந்ததால் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருடைய சளி மாதிரிகளை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பழ.நெடுமாறன் அவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பழ.நெடுமாறன் உடல்நிலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டறிந்து வருகின்றனர். இது தொடர்பாக திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் அவருடைய உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

G, பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed