September 24, 2021

கும்மிடிபூண்டியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, 1000 மகளிர்கள் பங்கேற்ற மாபெரும் ஏர்கலப்பை ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

நிகழ்வில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் வரவேற்றார். இதில், மாநில செயலாளர் விஜய் வசந்த், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் செங்கம் குமார், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், பாண்டிச்சேரி முதல்வர் மகள் விஜயகுமாரி, பாண்டிச்சேரி மகளிர் காங்கிரஸ் தலைவர் பஞ்சகாந்தி, மகளிர் காங்கிரஸ் மாநில துணை தலைவி மலர்கொடி ரமேஷ், வடக்கு மாவட்ட தலைவி ஜோதி சுதாகர் , திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் எம்.சம்பத், ஒன்றிய கவுன்சிலர் மதன்மோகன், எஸ்.எஸ்.பெரியசாமி,சிவாரெட்டி, செல்வம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாநில மகரளிரணி தலைவர் சுதா ராமகிருஷ்ணன் பேசும் போது, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் தான் அதிக அளவு நடைபெற்று வருகிறது என்றார். கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஜோதிமணி பேசும்போது கரோனா ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூபாய் 6500 என 6மாதங்களுக்கு வழங்க பிரதமர் மோடியில் காங்கிரஸ் தலைமை கேட்டு கொண்ட நிலையில், மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் 6000கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுகிறார் பிரதமர் மோடி. தமிழகத்திற்கு ராகுல் வந்தால் தமிழக மக்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது என்றார்.

காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.விஜயதாரணி பேசுகையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து அரிசி, காய்கறிகள் விடுவிக்கப்படலாம் என்றார். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் பேசும் போது வேளாண்மை சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை இல்லை என்றும், பணமதிப்பிழப்பு என்கிற உலகின் பெரிய ஊழலை செய்தவர் பிரதமர் மோடி, இந்த ஊழலில் மோடியின் நண்பர்களான பல கார்பரேட்டுகள் தங்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி கொண்டனர் என்றும், மத்திய அமைச்சர் அமீத்ஷா தான் இந்தியாவில் அதிக அளவு கருப்பு பணத்தை வெள்ளையாக்கினார். வேளாண்மை சட்டங்களால் கள்ள மார்கெட் உருவாகும், செயற்கையான விலையேற்றம் உருவாகும், விவசாயி அவர் நினைத்தை விளைவிக்க முடியாமல் கார்ப்பரேட் சொல்வதை மட்டும் விளைவிக்கும் சூழல் உருவாகும் என்றார்.

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசும் போது, வேளாண் சட்டம் ஜனநாயக விரோத சட்டம் என்றும், மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி வந்த பிரதமர் மோடி விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் விரோதமான வேளாண் சட்டங்களை நிறைவேற்றி உள்ளார் என்றார். பின்னர் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சிரிவல்ல பிரசாத், சஞ்சய் தத், சி.டி.மெய்யப்பன் பேசினார்கள்.

இறுதியாக, தலைமை உரையாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், 5000ஆண்டு காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிக்கு என்ன பயிரிட வேண்டும், எதை பயிரிட வேண்டும், யாருக்கு விற்க வேண்டும் என தெரியாமல் இல்லை, அத்தகைய விவசாயிகளை வைத்து கார்பரேட்டுகளை முதலாளியாக்க நினைக்கும் செயலே வேளாண் சட்டங்கள். இந்த சட்டத்தில் குறைந்த பட்ச ஆதார விலை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. கேட்டால் பிரதமர் மோடி ஆதார விலை நிர்ணயிக்கப்படும்
என வாய்மொழியாக தெரிவிக்கிறார். அதை சட்டமாக இயற்ற மறுக்கிறார் என்றார்.

எந்த வருமானமே இல்லாத அடித்தட்டு மக்களுக்காக திட்டம் தீட்டி அவர்கள் வாழ்விற்கு உதவுவது என்ற நோக்கிலேயே சோனியா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தி இன்றளவும் கிராம மக்களை வாழ்விக்கிறது, மக்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசியவர் வருகின்ற சட்டமன்ற தேர்தல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற தர்மத்தின் அணிக்கும், எடப்பாடி கே.பழனிச்சாமியின் அதர்மத்தின் அணிக்கும் இடையான போட்டி என்றும், மக்கள் இம்முறை தர்மத்தின் பக்கம் நிற்பார்கள் என்றவர், பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் என்றால் பயம், ஆனால் மோடியின் மீது தமிழகத்தில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு மட்டுமே பயம் என்றவர், மோடி என்கிற நாட்டை தவறான பாதையில் இட்டு செல்லும் தத்துவத்தை எதிர்க்க காங்கிரஸ் நிர்வாகிகள் மக்களை அமைப்பு ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் இணைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் மறைந்த மூத்த காங்கிரஸ் நிர்வாகி சி.ஆர்.தசரதன் மறைவு, தில்லியில் போராட்டம் நடத்தி மறைந்த விவசாயிகளின் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன முழக்கம் நடைபெற்றதோடு, காங்கிரஸ் நிர்வாகிககள் டிராக்டரில் ஏறி ஏர்கலப்பையோடு முழக்கம் இட்டனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed