September 23, 2021

அறந்தாங்கியை அடுத்த, வைரிவயலில் 81ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது…

1 min read
Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த வைரிவயல் கிராமத்தில் வீரமுனியாண்டவர் 81ம் ஆண்டு சந்தனகாப்பு உற்சவத்தை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா வண்டி பந்தயமும். குதிரைவண்டி பந்தயமும் நடைபெற்றது. வைரிவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் வீரமுனியாண்டவர் சந்தனகாப்பு அலங்காரத்தை முன்னிட்டு
ரேக்ளாவண்டி, பந்தயமும் குதிரைவண்டி பந்தயமும் தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றவை.

இந்த ஆண்டு 81 வது ஆண்டாக காலையில் நடைபெற்ற பெரியமாடு, கரிச்சான்மாடு, கரிச்சான்குதிரை, பூஞ்சிட்டுகுதிரை என நான்கு பிரிவுகளாக மாட்டுவண்டி,
குதிரைவண்டி பந்தயங்கள் நடைபெற்றது.
பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளும் 70க்கும் மேற்பட்ட குதிரைவண்டிகளும் பங்கு பெற்றன.

இதில் பெரியமாடுபிரிவில்
K.புதுப்பட்டி அம்பாள் முதலிடத்தையும்,
K.புதுப்பட்டி கௌசல்யா இரண்டாமிடத்தையும்,
கல்லந்தேரி சிவபிரபு, மூன்றாமிடத்தையும்
கரிச்சான்மாடு பிரிவில் வைரிவயல் வீரமுனியாண்டவர் முதலிடமும்
அறந்தாங்கி தினேஷ்கார்த்திக் இரண்டாமிடத்தையும், வெள்ளாளப்பட்டி கத்தாரத்தம்மாள் மூன்றாமிடத்தையும்,
புதுப்பட்டி அம்பாள் நான்காமிடத்தையும் பெற்றன.

பெரிய குதிரைவண்டி பந்தயத்தில்
கோவை அன்னூர்மூர்த்தி முதலிடத்தையும் பேராவூரணி நீவி இரண்டாமிடத்தையும், லால்குடி மன்சூர் மூன்றாம்மிடத்தையும் கரிச்சான்குதிரை பிரிவில் ஆடுதுறை முதாலாமிடத்தையும் திருச்சி இரண்டாமிடத்தையும், திருக்கடையூர் மூன்றாமிடத்தையும், பூஞ்சிட்டுகுதிரை பிரிவில் திருச்சி முதலாவதாகவும், நாகூர் இரான்டாவதாகவும், காரைக்கால் மூன்றாவதாகவும் எல்கை பகுதியை அடைந்து பரிசுகளை பெற்று சென்றது.
வெற்றிபெற்ற மாடு மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை வழங்கபட்டது. பந்தயத்திற்க்கான பாதுகாப்பு பணியினை அறந்தாங்கி காவல்துறையினர் மேற்கெண்டனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed