June 21, 2021

புழல் பகுதி மாணவிக்கு, உதயநிதி ஸ்டாலின் கல்லூரி கல்வி கட்டண உதவி…

1 min read

மாதவரம் சட்டமன்ற தொகுதி, புழல் அறிஞர் அண்ணா தெருவில் வசிக்கும், அமிர்தவர்ஷினி என்கின்ற மாணவிக்கு, இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் பருவ கல்வி கட்டணத்தை கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய திருக்கரங்களால் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர்களுடன், தலைமை பொது குழு உறுப்பினர் புழல் நாராயணன், மற்றும் மாணவியின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

இந்த மாணவிக்கு சென்ற வருடம் கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய திருக்கரங்களால், முதல் பருவ கல்வி கட்டணத்தை வழங்கி வாழ்த்தினார், என்பது குறிப்பிடத்தக்கது.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed