July 28, 2021

தாமரைப்பாக்கம் அருகே, கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 18,000லிட்டர் எரிசாராயம் பறிமுதல், 6பேரை கைது செய்து போலீசார் விசாரணை.

1 min read

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அடுத்த காரணிப்பேட்டையில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அங்குள்ள கிடங்கு ஒன்றில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு தடை செய்யப்பட்ட எரிசாராயம் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 500க்கும் மேற்பட்ட கேன்களில் பதுக்கி வைக்கப்பட்ட 18,000லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் எரிசாராயத்தை பதுக்கி வைத்திருந்த ராஜ்குமார், வெங்கடேசன், ஹரிஷ், ரவி, மதன், பாபு ஆகிய 6பேரை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *