June 19, 2021

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி,சேலம் அரசு மருத்துவமனையில், பிறந்த குழந்தைக்கு அதிமுகவினர் தங்க சங்கிலி அனுவித்தனர்…

1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, சேலம் மாநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில், சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க சங்கிலி வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவின் 73&வது பிறந்தநாளையொட்டி, சேலம் மாநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில், சேலம் அரசு மருத்துவமனையில் முதலில் பிறந்த குழந்தைக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் அசோக்குமார் தலைமையில், அவைத்தலைவர் பன்னீர்செல்வம் ஒன்றரை பவுன் தங்க சங்கிலி அணிவித்தார். பின்னர், 2 மற்றும் 3 வதாக பிறந்த குழந்தைகளுக்கு தலா கால் பவுன் மோதிரம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் கால் கொலுசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ எம்.கே.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் ஜெகதீஸ்குமார், சண்முகம், தியாகராஜா, கீதா மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் பாலச்சந்தர், அருள்ராம், மனோகர், ஜானகிராமன், அருணாசலம், சுரேஷ், வீரமணி, வி.எம்.ஜவகர், குமார், ராமச்சந்திரன், சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.  

செய்தியாளர் – தங்கதுரை
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed